மும்பையில் உள்ள ஐஐடி பாம்பேயில் இரண்டாம் ஆண்டு பி.டெக் படித்து வந்த 20 வயதான சஹில் வகோடே வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் தொடர்பாக மாணவர்கள் கடந்த சில நாட்களாக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சஹில் தற்கொலை விவகாரம்: பேராசிரியரின் டீன் பதவி நீக்கம்; முந்தைய தகவலுக்கு ஐஐடி பாம்பே மன்னிப்பு ஐஐடி பாம்பேயில் 20 வயது பி.டெக் மாணவர் சஹில் வகோடே தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பேராசிரியர் சூர்யநாராயணா தூல்லாவின் டீன் பதவியை ஐஐடி பாம்பே திங்கள்கிழமை உடனடியாக இடைநீக்கம் செய்தது. அதே நேரத்தில், சஹிலின் மரணம் தொடர்பாக முன்பு வெளியிட்ட தகவல்களுக்கு நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. சஹில் வகோடே, ஐஐடி பாம்பேயில் இரண்டாம் ஆண்டு பி.டெக் படித்து வந்தார். அவர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, மாணவர்கள் மூன்று நாட்களாக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், திங்கள்கிழமை நண்பகலில் மாணவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ஐஐடி பாம்பே இயக்குநர் பேராசிரியர் ஷிரீஷ் கேதாரே, “பேராசிரியர் சூர்யநாராயணா தூல்லாவின் டீன் பதவி உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். ஆங்கிலத்தில் வாசிக்க தூல்லா ஏற்கெனவே ஐஐடி பாம்பேயில் மாணவர் விவகாரங்களுக்கான டீனாக இருந்துள்ளார். தற்போது நிர்வாக விவகாரங்களுக்கான டீனாக உள்ளார். சஹில் தேர்வு எழுதியபோது அவர் கண்காணிப்பாளராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. சஹிலின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் தூல்லாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. தங்கள் மகன் சாதி அடிப்படையிலான பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்பட்டதாக சஹிலின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். We apologise for the statements contained in our earlier communication concerning the circumstances surrounding the unfortunate demise of Sahil.The details and circumstances leading up to the incident remain subject to investigation by the appropriate authorities. In view of… டீன் பதவி நீக்கம் மட்டும் போதாது என மாணவர்கள் எதிர்ப்பு தூல்லாவின் டீன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டபோதும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இதை ஏற்கவில்லை. அவரை நிர்வாகப் பதவியில் இருந்து மட்டும் நீக்காமல், பேராசிரியர் பதவியிலிருந்தும் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்று மாணவர்கள் தெரிவித்தனர். சஹிலின் மரணத்தைத் தொடர்ந்து ஐஐடி பாம்பே நிர்வாகத்திடம் மாணவர்கள் 18 கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். அதில் தூல்லாவை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்பதும் இடம்பெற்றிருந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு மாணவர்களுக்கும் இயக்குநர் ஷிரீஷ் கேதாரேவுக்கும் இடையே சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மாணவர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை நிர்வாகத்திடம் வழங்கினர். அதில் இயக்குநர் கையெழுத்திட்டு, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். சஹில் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு என்ன? சஹிலின் மரணம் தொடர்பாக ஐஐடி பாம்பே வெளியிட்ட ஆரம்பகட்ட தகவலில், அவர் தேர்வின்போது ஏ.ஐ. தளத்தை பயன்படுத்தியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணை முடிவடைவதற்கு முன்பே, மாணவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு பொதுவெளியில் தெரிவிக்கப்பட்டது சரியல்ல என்று அவர்கள் கூறினர். மேலும், விளக்கம் அளிக்க முடியாத நிலையில் இருக்கும் மாணவர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டை வெளியிடுவது அவரது பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, சஹிலின் மரணம் தொடர்பாக முன்பு வெளியிட்ட தகவல்களுக்கு ஐஐடி பாம்பே திங்கள்கிழமை மன்னிப்பு கேட்டது. இது போராட்ட மாணவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது. ஐஐடி பாம்பே எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், சஹிலின் மரணத்துக்கு முந்தைய நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து உரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சம்பவத்துக்கு முந்தைய நிகழ்வுகள் தொடர்பான விவரங்கள் அதிகாரப்பூர்வ விசாரணை மூலம் உறுதி செய்யப்படுவதற்கு முன்பே அவற்றை வெளியிட்டதும், குறிப்பிட்ட வகையில் விளக்கியதும் பொருத்தமற்றது” என்று நிறுவனம் தெரிவித்தது. சஹிலின் மரணம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஐஐடி பாம்பே நிர்வாகம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
மாணவர் தற்கொலை விவகாரம்: ஐ.ஐ.டி. பம்பாய் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்டது: பேராசிரியர் டீன் பதவியில் இருந்து நீக்கம்
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk