எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “இந்த ஆட்சியாளர்களின் விளம்பர வெறியால், சம்பா பயிரைக் காப்பாற்ற முடியுமா என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர். குறுவை சாகுபடிக்கு திறக்க வேண்டிய நேரத்தில் மேட்டூர் அணையை திறக்காமல் முதலமைச்சர் விவசாயிகளை வஞ்சித்தார். இந்த சூழலில், “சம்பா சாகுபாடிக்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்த பிறகு செப்டம்பர் இறுதியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்று விவசாயிகள் சொன்னதை ஏற்காமல், வெற்று விளம்பரத்துக்காக செப்டம்பர் 1-ஆம் தேதியே திறந்து வைத்தார். தற்போது அணைக்கான நீர்வரத்து 4000 கன அடி என குறைந்துவிட்ட நிலையில், அணையின் நீர் மட்டமும் 40 அடியை நோக்கி குறைந்து கொண்டு செல்கிறது. இதனால் கடை மடை வரை தண்ணீர் சேருவதும் – பயிரின் பூப்பு நேரத்தில் தண்ணீர் வருவதும் சந்தேகம் என்பதால், சம்பா சாகுபடியை திட்டமிட்டப்படி செய்ய முடியாது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். குறுவை சிறப்பு தொகுப்புக்கும் – வறட்சி நிவாரணத்தும் வித்தியாசம் புரியாமல் பேசிய முதலமைச்சர், இன்றைக்கு பேப்பரை படித்திருந்தால் விவசாயிகளின் இந்த அவலநிலை புரிந்து இருக்கும். ஆற்றுப்பாசனத்தை நம்பி சம்பா சாகுபடியில் இறங்க வேண்டாம் என்று வேளாண் வல்லுநர்கள் கூறும் அளவிற்கு நிலைமையை மோசமாக்கி வைத்துள்ளது இந்த Circus அரசாங்கம். அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறப்பேன் என்று வெற்று வசனங்களை பேசிய முதலமைச்சருக்கு, முழு பயிர்க்கடன் கேட்டுப் போராடும் விவசாயிகளை சந்திக்ககூட மனம் வரவில்லை. திருச்சியில் போராடிய விவசாயிகளிடம் 5 நிமிடம் மட்டுமே அதிகார திமிரோடு பேசிவிட்டு சென்ற அமைச்சர்களை கண்டித்து அதற்கு ஒரு போராட்டம் நடத்தும் அளவில் தான் இந்த Reels வெறி ஆட்சி இருக்கிறது. விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்காமல், வேளாண் பெருங்குடி மக்களுக்கு வறட்சி நிவாரணத்தையும், முழுப்பயிர்க்கடன் தள்ளுபடியையும் இந்த அரசு உடனே வழங்க வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “தவெக ஆட்சியும் பெண்களின் பாதுகாப்பில் நிர்வாகத் திறமையை இழந்து விட்டது!” – வானதி சீனிவாசன் நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? “வெற்றிப் பயணம்” திட்டம் : முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம்! சென்னையில் ஸ்டார்பக்ஸ் உலகளாவிய திறன் மையம் – முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
“விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா?” – உதயநிதி ஸ்டாலின்
📅
📍 Salem, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk