ஜெம் வீரமணி வழக்கில் பணம் கைமாறியதா? கூடுதல் ஆணையர் தலைமையில் விசாரிக்க குழு

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️
ஜெம் வீரமணி வழக்கில் பணம் கைமாறியதா? கூடுதல் ஆணையர் தலைமையில் விசாரிக்க குழு

போக்சோ வழக்கில் ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணியை கைது செய்யாமல் ரூ.10 கோடி பணம் கைமாறியதாக கூறப்படுகிறது. இந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக விசாரிக்க கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. போக்சோ வழக்கில் ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணியை கைது செய்யாமல் ரூ.10 கோடி பணம் கைமாறியதாக கூறப்படுகிறது. இந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக விசாரிக்க கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி விபசார தடுப்பு பிரிவு போலீசில் புகாரை ஒன்றை அளித்திருந்தார். "அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என்னுடைய அலுவலகத்துக்கு வந்தார். அவர் 'பென்டிரைவ்' ஒன்றை கொடுத்தார். அதில் பிரபல தொழில் அதிபரான 'ஜெம்ஸ் கிரானைட்ஸ்' உரிமையாளர் வீரமணி (வயது 84) சிறுமியிடம் பாலியல் உறவில் ஈடுபட்ட 'வீடியோ' காட்சிகள் இருப்பதாக கூறிச் சென்றார்' என்ற தகவலை தெரிவித்தார். அந்த ’பென்டிரைவ்’வில் இருந்த வீடியோ காட்சியை விபசார தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். இதில் தொழில் அதிபர் வீரமணி சிறுமியுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசார் அக்டோபர் 7 ஆம் தேதி அன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் தொழில் அதிபர் வீரமணி சாந்தி என்ற பெண்ணுக்கு தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்துள்ளார். அந்த வீட்டில் சாந்தியும், அவரது கணவர் மகேந்திர சிம்கனும் பல சிறுமிகளை தொழில் அதிபர் வீரமணிக்கு விருந்தாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களுடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இதில் இந்த வழக்கு தொடர்பான 'வீடியோ' ஆதாரங்கள், சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள் போலீசாருக்கு கிடைத்தன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பல சிறுமிகளை சீரழித்த தொழில் அதிபர் வீரமணியை மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்புப்பிரிவு போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். சிறுமிகளை சப்ளை செய்து வந்த சாந்தி, அவரது கண வர் மகேந்திர சிம்கன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு போக்சோ வழக்கு என்பதால் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் கீதாஞ்சலி மற்றும் விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி ஆகியோர் தனி கவனம் செலுத்தி புகாரில் அளிக்கப்பட்ட பென்டிரைவில் உள்ள சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை தொடங்கினர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறார். விசாரணை அதைதொடர்ந்து தொழிலதிபர் வீரமணியை நீதிமன்ற அனுமதியுடன் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்தனர். வீரமணிக்கு 80 வயதுக்கு மேல் ஆவதால் சிறையில் உள்ள அவரை வெளியே கொண்டு வந்து விசாரணை நடத்த முடியாததால், நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையிலேயே கடந்த புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை துணை கமிஷனர் கீதாஞ்சலி மற்றும் உதவி கமிஷனர் ராஜலட்சுமி ஆகியோர் மட்டும் வீரமணியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஆசிரமங்கள் தொடங்கி ஏழை மாணவிகளுக்கு படிக்க நிதி உதவி செய்து இச்சைக்கு பயன்படுத்தியதும், 100 சிறுமிகள், இளம்பெண்களை 'ஜெம் கிரானைட் வீரமணி' சீரழித்ததும், உல்லாசத்துக்காக போயஸ் கார்டனில் ரூ.2 லட்சத்துக்கு பங்களா வீட்டை வாடகை எடுத்ததும் அம்பலமாகியுள்ளது. இந்த வழக்கில் தீவிர விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. முதல்வர் உத்தரவு இந்த ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். வீரமணி மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது என்றும் வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த இரண்டு நாட்களில் இரண்டு முறை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜை அழைத்து முதலமைச்சர் விஜய் நேரடியாக ஆலோசனை நடத்தியுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் உத்தரவையடுத்து கிரானைட் வீரமணி மீதான பாலியல் வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக விபசார தடுப்பு பிரிவில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், போக்சோ வழக்கில் ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணியை கைது செய்யாமல் ரூ.10 கோடி பணம் கைமாறியதாக கூறப்படுகிறது. இந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக விசாரிக்க கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் குழு அமைத்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். யார் யாருக்கு பணம் சென்றது, காவல் அதிகாரிகள் பணம் பெற்றார்களா? என இந்தக் குழு விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Martin Jeyaraj is the Senior Sub Editor and Sports Journalist of Tamil Indian Express Digital. Dynamic and seasoned Multimedia Journalist with over 5 years of experience in reporting and digital storytelling. Proficient in data-driven journalism and social media engagement, having increased publication readership. Specialization: While he covers a variety of sports, he is primarily covers Cricket for the publication. with a focus on domestic tournaments and international fixtures. Based in chennai, his reporting has ranged from the Ranji Trophy to ICC World Cups. he also writes extensively about Kabbadi. Writing Style: His work is characterized by storytelling breaking down the bio-mechanics, tactics, and psychological grit of athletes. also explore the personal journeys of athletes beyond the podium. Notable Recent Articles: conversation with PKL Tamil Thalaivas coach Sanjeev Baliyan, Assistant coach Suresh Kumar. Conversation with Tamil Thalaivas CEO Shushen Vashishth. Deep Dive discussion about Rugby Premier League, with Bengaluru Bravehearts CEO Sanjith Shetty. Professional Experience: Tamil Indian Express: Prior to his current role as Senior Sub Editor he started as retainer. after gaining experience, he served as Sub Editor. SUN TV NETWORK: He previously worked as programming producer in Sun Tv network, creating promos and fillers. and writing scripts for kid's shows. Deccan Chronicle and NEWS 7 TAMIL where he learned reporting and covering daily News as Trainee reporter. both organisations shaped him to pursue Journalism as career. Qualifications, Degrees: Bachelor's degree in physics from Alagappa University, Karaikkudi. PG in Master of Arts Journalism and Mass Communication from SRM University, Chennai. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை