நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் “நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் – தமிழ்நாடு” அமைப்பின் நிர்வாகிகள், சென்னை – அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது நீட் எதிர்ப்பு கூட்டியக்கம்- தமிழ்நாடு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்த கமு.க.ஸ்டாலின் #BanNEET இணையவழிக் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு தனது ஆதரவையும் பதிவு செய்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “நீட் என்பது தேர்வல்ல; எத்தனையோ மாணவர்களின் சிதைக்கப்பட்ட கனவுகள்! குடும்பங்களின் கண்ணீர்! அதனால்தான் சமரசமின்றி, தொடக்கம் முதலே “நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு!” என்று போராடி வருகிறோம். அந்த இலக்கோடு #BanNEET இயக்கத்தை முன்னெடுத்துள்ள நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் – தமிழ்நாடு தோழர்களை இன்று சந்தித்து, அவர்களது கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு என் ஆதரவைத் தெரிவித்தேன். இது அரசியல் வேறுபாடுகளைக் கடந்த, நம் மாணவர்களின் எதிர்காலத்துக்கான போராட்டம்.எனவே, கழகத் தோழர்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த இயக்கத்திற்கு ஆதரவளித்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். “அதிகாரிகள் பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்களா?” – கனிமொழி “தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் உடைப்பு: உடனே தடுத்து நிறுத்த வேண்டும்!” – அன்புமணி வடகிழக்குப் பருவமழை: தயார்நிலையில் இருக்க அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்! “விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா?” – உதயநிதி ஸ்டாலின் Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
“நீட், எத்தனையோ மாணவர்களின் சிதைக்கப்பட்ட கனவு” – மு.க.ஸ்டாலின்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk