கனடாவில் விமானப் பயிற்சி பெறுவதற்காகச் சென்றிருந்த இந்த இரு மாணவர்களும், வழக்கமான பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்துக்கான முழுமையான காரணங்கள் குறித்த மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. விமானப் பயிற்சி பெற்றபோது கோர விபத்து: கனடாவில் 2 இந்திய மாணவர்கள் பலி கனடாவில் விமானப் பயிற்சிப் பெற்றுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட கோர விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீதரன் திருஞானசம்பந்தம் ஆகிய இரண்டு இந்திய மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் செய்தி அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வானில் நிகழ்ந்த விபத்துகனடாவில் விமானப் பயிற்சி பெறுவதற்காகச் சென்றிருந்த இந்த இரு மாணவர்களும், வழக்கமான பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்துக்கான முழுமையான காரணங்கள் குறித்த மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. வேன்குவரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் (Consulate General of India) இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ பதிவில், "கனடாவில் விமானப் பயிற்சியின் போது நேர்ந்த கோர விபத்தில் திரு. மனோஜ் சிவகுமார் மற்றும் திரு. ஸ்ரீதரன் திருஞானசம்பந்தம் ஆகியோர் உயிரிழந்தமைக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும். மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான (Repatriation) அனைத்துத் தூதரக உதவிகளையும் செய்வதற்குத் தூதரகம் முழுமையாகத் தயாராக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது. The Consulate General of India, Vancouver, expresses its deepest condolences on the tragic demise of Shri Manoj Sivakumar and Shri Srisaran Thirugnanasambantham, two Indian students from Tamil Nadu and Puducherry, who lost their lives in a tragic air accident in Canada during… விமானியாக வேண்டும் என்ற கனவோடு வெளிநாடு சென்று, எதிர்பாராத விபத்தில் உயிரை இழந்த இந்த இளம் மாணவர்களின் இழப்பு தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பெரும் சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
கனடாவில் பெரும் சோகம்: விமானப் பயிற்சி விபத்தில் தமிழக, புதுச்சேரி மாணவர்கள் பலி
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk