தமிழ்திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருந்த சூரி தற்போது கதாநாயகன் அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்த விடுதலை, மாமன், கருடன், கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிப்படங்களாக அமைந்தன இந்த நிலையில் இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில், சூரி கதாநாயகனாக நடித்து வெளியான படம் மண்டாடி. இப்படத்தில் சூரியுடன் தெலுங்கு நடிகர் சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த 10-ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன் பெரும் வசூலையும் குவித்துவந்தது. இந்த நிலையில் இப்படம் வெளியாகி 10 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இது சூரி கதாநாயகனாக நடித்து 100 கோடி வசூல் செய்த முதல் படமாகும். இதுகுறித்து நடிகர் சூரி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “உங்கள் பேரன்பால்…மண்டாடி 100+ கோடி! இந்த வெற்றி முழுக்க முழுக்க உங்களுடையது. கோடி நன்றிகள்!” என்று தெரிவித்துள்ளார். உங்கள் பேரன்பால்… #Mandaadi 100+ கோடி! ❤️🙏இந்த வெற்றி முழுக்க முழுக்க உங்களுடையது.கோடி நன்றிகள்! Thank you all 💪🤝🙏😍❤️@rsinfotainment @elredkumar sir #Mani #Sathyaraj sir @MathiMaaran #Suhass @gvprakash @Mahima_Nambiar @Bala_actor & Mandaadi team Love you all ❤️🙏💪💐 pic.twitter.com/2yMPGb2DOP “தனியார் நிறுவனங்களின் நலனுக்காக, ஆவின் பால் விநியோகத்தை குறைக்கிறதா தவெக அரசு?” – நயினார் நாகேந்திரன் “நீட், எத்தனையோ மாணவர்களின் சிதைக்கப்பட்ட கனவு” – மு.க.ஸ்டாலின் “அதிகாரிகள் பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்களா?” – கனிமொழி “தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் உடைப்பு: உடனே தடுத்து நிறுத்த வேண்டும்!” – அன்புமணி Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
சூரியின் மண்டாடி: 100 கோடி வசூல்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk