ஜப்பானை நெருங்கும் பேராபத்து.. 168 கிமீ வேகத்தில் நகரும் அரக்கன்.. ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
ஜப்பானை நெருங்கும் பேராபத்து.. 168 கிமீ வேகத்தில் நகரும் அரக்கன்.. ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள்!

செய்தியாளர் - ராஜ்குமார்.ர ஜப்பானின் ஐச்சி மற்றும் நகோயா பகுதிகளில் 2026-ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 19-ஆம் தேதி போட்டிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிய நிலையில், பல்வேறு விளையாட்டுகளில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பதக்கங்களுக்காகக் களமிறங்கியுள்ளனர். ஆனால், போட்டிகள் தொடங்கிய சில நாட்களிலேயே அங்கு நிலவிய மோசமான வானிலை, ஏற்பாட்டாளர்களுக்குப் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சக்திவாய்ந்த புயலும் உருவாகி வருகிறது. 'டுஜுவான்' (Dujuan) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், மணிக்கு 162 கிலோமீட்டர் என்ற அதிவேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 72 மணி நேரத்தில் இது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் ஆபத்தைக் கருத்தில் கொண்டு, பல பகுதிகளுக்கு 'சிவப்பு எச்சரிக்கை' (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஜப்பானை நோக்கி டுஜுவான் புயல் நகர்ந்து வரும் நிலையில், டோக்கியோ அருகே உள்ள சிபா மாகாணத்தில் உள்ள போசோ தீபகற்த்தைக் கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, டோக்கியோவை உள்ளடக்கிய கான்டோ பகுதியிலும், சிபா மாகாணத்திலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானைத் தாக்கும் இந்த ஆண்டின் 25-ஆவது புயல் டுஜுவான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற இருந்த குதிரையேற்றப் பிரிவின் (Eventing) போட்டி டுஜுவான் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தற்போது தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் மட்டுமின்றி, வீரர்கள் தங்கியிருக்கும் இடங்கள் மற்றும் அவர்கள் பயணிக்கும் பகுதிகளிலும் வானிலை நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய தகவலின்படி, முழு ஆசிய விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்படவில்லை. மோசமான வானிலை காரணமாகக் குறிப்பிட்ட சில போட்டிகளின் அட்டவணையில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒருபுறம், ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பதக்கங்களுக்காகக் களத்தில் போராடிக் கொண்டிருக்க... மறுபுறம், ஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் டுஜுவான் புயல் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் புயலின் பாதை மற்றும் மழையின் தீவிரம் எப்படி மாறுகிறது என்பதைப் பொறுத்தே, மேலும் போட்டிகள் ஒத்திவைக்கப்படுமா அல்லது அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்படுமா என்பது தெரியவரும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை