சென்னையில் மாணவர் பலி: கண்ணுக்கே தெரியாத பூச்சி உயிரை பறித்தது எப்படி? உண்ணிக் காய்ச்சல் அறிகுறி, சிகிச்சை

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️
சென்னையில் மாணவர் பலி: கண்ணுக்கே தெரியாத பூச்சி உயிரை பறித்தது எப்படி? உண்ணிக் காய்ச்சல் அறிகுறி, சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images உண்ணிக்காய்ச்சல் என்பது ஒரு பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று. இது சிறிய செடிகளில் காணப்படும் ஒரு வகை உண்ணியில் காணப்படும். உண்ணிகள் மனிதர்களை கடிக்கும் போது மனிதர்களுக்கு உண்ணிக்காய்ச்சல் நோய் உண்டாகிறது. இந்நோய் ஆங்கிலத்தில் ஸ்க்ரப் டைஃபஸ் (Scrub Typhus) என்று அழைக்கப்படுகிறது. ஓரியன்சா ட்சுட்சுகா முஷி (Orientia tsutsugamushi) எனும் பாக்டீரியாவால் இந்நோய் ஏற்படுகிறது. சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் விடுதியில் தங்கி படித்து வந்த 20 வயது மாணவர் ஒருவர் கடந்த வாரம் உண்ணிக் காய்ச்சல் ஏற்பட்டு, சிகிச்சைப் பலனளிக்காமல் இறந்துவிட்டார். பொதுவாக விளைநிலங்கள், செடிகொடிகள் நிறைந்த பகுதி ஆகியவற்றிலேயே இந்த பாக்டீரியா இருக்கும். நகர்ப்புறங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல."இந்தியாவில் குறிப்பிட்ட நில வகைகளில் மட்டுமே ஏற்படும் நோயாக இனியும் இது இல்லை" என்று 2024-ம் ஆண்டு தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்திருந்தது. நோய் தீவிரம் அதிகமாக இருந்தால், மன பிறழ்வு ஏற்படலாம். நுரையீரல், இதயம், சிறுநீரகம், மூளை ஆகிய உறுப்புகளும் பாதிக்கப்படலாம். உண்ணிக்கடி பெரும்பாலும் வலியற்றதாகவே இருக்கும், சில நேரங்களில் அரிப்பு ஏற்படலாம். "நடுங்கும் குளிர், காய்ச்சல், தீவிர தலைவலி" ஆகியவை நோயின் முதல் அறிகுறிகள் என்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது. பட மூலாதாரம், Getty Images "100 பேருக்கு இந்நோய் ஏற்பட்டால், 50 பேருக்கு பூச்சி கடித்த இடம் கருப்பாக ஒரு பொட்டு வைத்தது போல் தெளிவாக தெரியும். காய்ச்சலுடன் சிலருக்கு நெறி கட்டும், சிலருக்கு கல்லீரலை பாதிக்கும். சிலருக்கு நுரையீரலை பாதிக்கும். எனவே சில பேர் மருத்துவமனை வரும் போது மூச்சு திணறலுடன் வருவார்கள்." என்று இந்நோயின் பாதிப்புகளை பிபிசி தமிழிடம் எடுத்துரைத்தார் நோய்தொற்றியல் நிபுணர் வி.ராமசுப்ரமணியன். End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு "உண்ணிக்காய்ச்சல் ஒரு வகை ரிக்கெட்சியல் நோய். ரிக்கெட்சியா (Rickettsiae) எனப்படும் சிறிய கிராம்-எதிர்மறை (Gram-negative) குச்சி வடிவ பாக்டீரியாக்களால் ரிக்கெட்சியல் நோய்கள் ஏற்படுகின்றன. இவை பெரும்பாலும் பேன், உண்ணி மற்றும் பூச்சி போன்றவற்றின் உடலில் வாழும் ஒட்டுண்ணிகளாக இருக்கின்றன. குறிப்பாக அவற்றின் செரிமானக் குழாயில் காணப்படுகின்றன. பொதுவாக அறியப்படும் ரிக்கெட்சியல் நோய் ஸ்க்ரப் டைபஸ் ஆகும். ஸ்க்ரப் டைபஸ் முதன்முதலில் ஜப்பானில் கண்டறியப்பட்டது. அங்கு இந்த நோய் பூச்சிகளால் (மைட்ஸ்) பரவுவதாக தெரியவந்ததால், அதற்கு "ட்சுட்சுகா முஷி" (Tsutsuga-mushi) என்று பெயர் வைக்கப்பட்டது. ஜப்பானிய மொழியில் ட்சுட்சுகா (tsutsuga) என்றால் ஆபத்தான என்றும், முஷி (mushi) என்றால் பூச்சி அல்லது மைட் என்றும் பொருள்." என்று விளக்குகிறார் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி. சிகர் மைட்ஸ் (chigger mites) எனும் பூச்சிகளே இந்த நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவை கொண்டிருக்கின்றன. இவை 0.2 மில்லி மீட்டர் முதல் 0.4 மில்லி மீட்டர் அளவே (தோராயமாக) இருப்பதால் பொதுவாக கண்ணுக்கு தெரியாது. இதனை மைக்ரோஸ்கோப் மூலமாகவே காண முடியும். இந்த பூச்சிகள் தங்களுக்கு என குறிப்பிட்ட பகுதிகளை வரையறுத்து வாழக் கூடியவை. பட மூலாதாரம், Dr V Ramasubramanian இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, கொரியா, இந்தோனீசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்நோய் மக்களை பாதித்துள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் பத்து லட்சம் புதிய உண்ணிக்காய்ச்சல் தொற்றுகள் ஏற்படுவதாக மத்திய சுகாதார சேவைகள் இயக்குநரகம் தெரிவிக்கிறது. உரிய சிகிச்சை கொடுக்கப்படாவிட்டால், இந்த நோய் காரணமாக ஏற்படும் இறப்புகளின் விகிதம் 30% க்கும் அதிகமாகக் கூடும் என்றும் இயக்குநரகம் தெரிவிக்கிறது. "உண்ணிக்காய்ச்சலை உடனடியாக கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளித்தால் அது 100% எளிதாக குணப்படுத்தக் கூடிய நோயாகும். சிகிச்சை தாமதமானால் நோயின் தீவிரம் அதிகமாகும்" என்கிறார் பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி. "சிலருக்கு நுரையீரலில் ஏ.ஆர்.டி.எஸ் பாதிப்பு (Acute Respiratory Distress Syndrome- தீவிர சுவாச நோய்) ஏற்படலாம். அவர்களுக்கு வெண்டிலேட்டர் உதவி தேவைப்படும். இரண்டு மூன்று நாட்கள் கழித்து தான் உடல்நிலை முன்னேறுகிறதா இல்லையா என்று தெரியும்." என்கிறார் மருத்துவர் வி.ராமசுப்ரமணியன். உண்ணிக்காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளில் அதீத காய்ச்சல், திடீரென காய்ச்சல் ஏற்படுவதாகும். டெங்கு, மலேரியா போன்ற நோய்களின் அறிகுறிகளை விட உண்ணிக் காய்ச்சல் அறிகுறிகள் மிகவும் வேறுபட்டதல்ல. ஐந்து நாட்களுக்கு மேல் காய்ச்சலுக்கான காரணம் தெரியாமல் இருந்தால் அதை உண்ணிக்காய்ச்சலாக கருத வேண்டும் என்று தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்துகிறது. "காய்ச்சல் வந்தால், சாதாரண வைரஸ் காய்ச்சலா, டெங்குவா, ஃப்ளூவா, சிக்குன் குனியாவா அல்லது வேறு ஏதேனுமா என்று மருத்துவர் தான் கண்டறிந்து சொல்ல முடியும். எனவே காய்ச்சலுக்கு என மருந்து கடையில் நேரடியாக மருந்து வாங்கி போட்டுக் கொள்ளாதீர்கள். இந்த நோய்களை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை வழங்காவிட்டால், உயிரிழப்பு நேரிடலாம்." என்று மருத்துவர் ராமசுப்ரமணியன் கூறுகிறார். செடி, கொடிகள் அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு சொல்வோர், குறிப்பாக ட்ரெக்கிங் செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர் ராமசுப்ரமணியன் எச்சரிக்கிறார். "பூச்சி கடிக்காமல் இருக்க, வெளியில் செல்லும் போது உடல்களை முழுவதும் மறைக்கும் வகையில் ஆடை அணிந்து கொள்ள வேண்டும். உடலில் எங்கேனும் பூச்சி கடித்த தடம் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்" என்று எச்சரிக்கிறார் மருத்துவர் ராமசுப்ரமணியன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை