குறுவை, சம்பா சாகுபடி பாதிப்பு: தமிழகத்திற்கான காவிரி நீரை உடனடியாகத் திறக்க வேண்டும்; பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
குறுவை, சம்பா சாகுபடி பாதிப்பு: தமிழகத்திற்கான காவிரி நீரை உடனடியாகத் திறக்க வேண்டும்; பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

அரசியல் நெருக்கடிகளைத் தாண்டி, சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புகளின்படியே காவிரியில் நீர் திறப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆணையம் மேற்கொள்ள வேண்டும். அரசியல் நெருக்கடிகளைத் தாண்டி காவிரியில் நீர் திறக்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல் மேகதாது அணை கட்டுமானத்தைத் தடுத்திடவும், ராசிமணலில் அணை கட்டத் திட்டமிடவும், தமிழகத்தை வறட்சியிலிருந்து மீட்டெடுக்கவும் வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் தொடங்கிய இப்பயணம் பல்வேறு மாவட்டங்கள் வழியாகச் சென்று செப்டம்பர் 24-ஆம் தேதி திருவாரூரில் நிறைவடைகிறது. இந்தப் பிரச்சாரக் குழுவினர் திருச்சிக்கு வருகை தந்தபோது, சிந்தாமணி அண்ணாசிலை அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பி.ஆர்.பாண்டியன் தெரிவித்த முக்கியக் கருத்துகள்: "கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் தர மறுக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 6,000 கன அடி நீர் திறக்க ஆணையிட்டும், அதனை கர்நாடகா நிறைவேற்றாமல் அணைகளை மூடிவிட்டதால் காவிரி டெல்டா வறண்டு, குறுவை மற்றும் சம்பா சாகுபடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, உச்சநீதிமன்றத்திற்கு இணையான அதிகாரங்கள் உள்ளன. கர்நாடகத்திடமிருந்து தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டியது ஆணையத்தின் கடமையாகும். அரசியல் நெருக்கடிகளைத் தாண்டி, சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புகளின்படியே காவிரியில் நீர் திறப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆணையம் மேற்கொள்ள வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக நடுவர் மன்ற தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய முடியாத நிலையில், அரசியல் அழுத்தங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த முடியாது. காவிரி விவகாரத்தில் ஆணையம் தனது சட்டப்பூர்வ அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தி தமிழகத்திற்கான நீரைப் பெற்றுத்தர வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது ஏராளமான விவசாய சங்க பிரதிநிதிகள் உடனிருந்தனர். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை