குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் விற்பனையாளர்கள் மட்டுமே பணியில் இருக்கும் சூழலில், மேற்பார்வையாளர்கள் வழக்கம்போல் தமது பணிகளை மட்டுமே செய்கின்றனர் டாஸ்மாக் கடைகளில் எதிரொலிக்கும் புதிய சீருடை சர்ச்சை! - கூடுதல் பணிச்சுமையை தட்டித் கேட்கும் விற்பனையாளர்கள் தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லரை மதுக்கடைகளில் 20,000-க்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூல் தொடர்பான விவகாரங்கள் பூதாகரமான நிலையில், கடந்த மாதம் டாஸ்மாக் பணியாளர்களுக்கு தமிழக அரசு சம்பள உயர்வும் வழங்கியுள்ளது. இதற்கிடையே, டாஸ்மாக் பணியாளர்களுக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, மேற்பார்வையாளர்களுக்கு வெளிர் நீல நிறச் சட்டையும் அடர் நீல நிறப் பேன்ட்டும் வழங்கப்படவுள்ளது; விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு வெளிர் பழுப்பு நிறச் சட்டையும் அடர் சாம்பல் நிறப் பேன்ட்டும் வழங்கப்பட உள்ளது. இதற்கான மாதிரிப் புகைப்படங்களை டாஸ்மாக் நிர்வாகம் நேற்று வெளியிட்டதுடன், நவம்பர் 15 முதல் புதிய சீருடை அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் இன்னல்களும் கோரிக்கைகளும்: இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கும் தொடர் இன்னல்களுக்கும் ஆளாவதாகக் கூறி, திருச்சி மாவட்ட டாஸ்மாக் மண்டல அலுவலரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்: ”கடந்த 2003-ஆம் ஆண்டில் வெறும் விற்பனைப் பணியில் மட்டுமே ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது லோடு இறக்கும்போது ஒரு ஸ்கேனிங், விற்பனை செய்யும்போது ஒரு ஸ்கேனிங் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டுவது எனப் பணிகள் பல மடங்காகக் கூடுதல் சுமை ஏற்படுத்தியுள்ளன. காலி மது பாட்டில்களை வாங்குவது, ஜிபே (GPay) மற்றும் கூட்ட நெரிசலின்போது ஸ்கேனிங் செய்யாமல் வழங்கப்பட்ட பாட்டில்களை மறுநாள் வந்து ஸ்கேன் செய்வது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் விற்பனையாளர்கள் மட்டுமே பணியில் இருக்கும் சூழலில், மேற்பார்வையாளர்கள் வழக்கம்போல் தமது பணிகளை மட்டுமே செய்கின்றனர். 50 வயது கடந்த விற்பனையாளர்கள் மட்டும் இந்தச் சுமையைத் தாங்குவது மிகுந்த வேதனை அளிக்கிறது. டாஸ்மாக் பணியாளர் அனைவருக்கும் ஊதிய உயர்வு சமமாக வழங்கப்பட்டுள்ள நிலையில், விற்பனையாளர்களுக்கு மட்டும் கூடுதல் பணிச்சுமை வழங்குவது ஏற்புடையதல்ல. "மேற்பார்வையாளர்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். ஒரே சீருடை கோரிக்கை: "டாஸ்மாக் பணியாளர் என்றாலே அனைவரும் ஊழியர்தான்; எனவே அனைவருக்கும் ஒரே மாதிரியான பணிப்பிரிவுகள் இருக்க வேண்டும்" என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், விற்பனையாளர்களுக்கு ஒரு சீருடை, மேற்பார்வையாளர்களுக்கு மற்றொரு சீருடை எனப் பணியாளர்களை வேறுபடுத்திப் பார்ப்பது வேதனையளிப்பதாகவும், சம்பள உயர்வு எவ்வாறு சமமாக வழங்கப்பட்டதோ அதேபோன்று சீருடையிலும் அனைவருக்கும் ஒரே நிறம் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் மாவட்ட மேலாளரிடம் வலியுறுத்தினர். இம்மனுவைப் பெற்றுக் கொண்ட மண்டல மேலாளர், இப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டிப்பாகக் காணப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது, விற்பனையாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மணிகண்டன், பழனிவேல், அரசு பணியாளர் சங்கத்தைச் சார்ந்த முருகானந்தம், சுப்பிரமணி, ஒருங்கிணைந்த விற்பனையாளர் சங்கத்தைச் சார்ந்த ராஜமாணிக்கம், விசிக சங்கத்தைச் சார்ந்த காளியப்பன், ஏஐடியுசி சங்கத்தைச் சார்ந்த சேவியர், அண்ணா தொழிற்சங்கத்தைச் சார்ந்த அன்புச் செழியன் மற்றும் திருச்சி மாவட்ட விற்பனையாளர்கள் அனைவரும் இணைந்து மண்டல மேலாளரை நேரில் சந்தித்து முறையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. — க. சண்முகவடிவேல் Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு கூடுதல் பணி சுமை; சீருடை ஒரே மாதிரியானதாக இருக்க வேண்டும்; அரசுக்கு விற்பனையாளர்கள் கோரிக்கை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk