தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக, யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக அமைச்சர் டி.கே.பிரபு ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழக கனிம வளத்துறை அமைச்சரும், காரைக்குடி தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினருமான டி.கே. பிரபு, தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, மனுவை முறைப்படி பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றப் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். நீதிபதி கே. கோவிந்தராசன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், அமைச்சர் தரப்பில் வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அமைச்சர் தாக்கல் செய்த மனுவில், ஊடகங்கள்மற்றும் சமூக வலைதளங்களில் தன்னை குறிவைத்து பொய்யான, உள்நோக்கம் கொண்ட மற்றும் அவதூறான கருத்துகளை மாரிதாஸ் தொடர்ந்து வெளியிட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மாரிதாஸ் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், அவை தனது நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மாரிதாஸ் மட்டுமின்றி, அமெரிக்காவைச் சேர்ந்த X Corporation, Google LLC மற்றும் YouTube India ஆகிய நிறுவனங்களும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் பதிவுகள் மற்றும் அவற்றின் மூலம் ஏற்பட்டதாக கூறப்படும் பாதிப்புகள் தொடர்பாக இந்த நிறுவனங்களும் வழக்கில் இடம்பெற்றுள்ளன. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Martin Jeyaraj is the Senior Sub Editor and Sports Journalist of Tamil Indian Express Digital. Dynamic and seasoned Multimedia Journalist with over 5 years of experience in reporting and digital storytelling. Proficient in data-driven journalism and social media engagement, having increased publication readership. Specialization: While he covers a variety of sports, he is primarily covers Cricket for the publication. with a focus on domestic tournaments and international fixtures. Based in chennai, his reporting has ranged from the Ranji Trophy to ICC World Cups. he also writes extensively about Kabbadi. Writing Style: His work is characterized by storytelling breaking down the bio-mechanics, tactics, and psychological grit of athletes. also explore the personal journeys of athletes beyond the podium. Notable Recent Articles: conversation with PKL Tamil Thalaivas coach Sanjeev Baliyan, Assistant coach Suresh Kumar. Conversation with Tamil Thalaivas CEO Shushen Vashishth. Deep Dive discussion about Rugby Premier League, with Bengaluru Bravehearts CEO Sanjith Shetty. Professional Experience: Tamil Indian Express: Prior to his current role as Senior Sub Editor he started as retainer. after gaining experience, he served as Sub Editor. SUN TV NETWORK: He previously worked as programming producer in Sun Tv network, creating promos and fillers. and writing scripts for kid's shows. Deccan Chronicle and NEWS 7 TAMIL where he learned reporting and covering daily News as Trainee reporter. both organisations shaped him to pursue Journalism as career. Qualifications, Degrees: Bachelor's degree in physics from Alagappa University, Karaikkudi. PG in Master of Arts Journalism and Mass Communication from SRM University, Chennai. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
சமூக ஊடங்களில் அவதூறு கருத்து: யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக அமைச்சர் டி.கே.பிரபு வழக்கு
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk