மத்திய அரசில் இன்டர்ன்ஷிப் வாய்ப்பு: 25 வயது வரை விண்ணப்பிக்கலாம்; ரூ.10,000 உதவித்தொகை

📅 📍 Tirunelveli, Tamil Nadu 🏷️ News ✍️
மத்திய அரசில் இன்டர்ன்ஷிப் வாய்ப்பு: 25 வயது வரை விண்ணப்பிக்கலாம்; ரூ.10,000 உதவித்தொகை

MEA Internship 2026 இளங்கலைப் படிப்பின் இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம், இருப்பினும் அவர்களது இறுதியாண்டு பாடத்திட்டத்தில் இன்டர்ன்ஷிப் கட்டாயக் கூறாக இருக்க வேண்டும். MEA Internship 2026: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இன்டர்ன்ஷிப்; செப்.27 கடைசி நாள்! மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் (MEA) 2026-27 இன்டர்ன்ஷிப் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. அக்டோபர் 2026 முதல் மார்ச் 2027 வரை நடைபெற உள்ள இந்த இன்டர்ன்ஷிப்புக்கு தகுதியான மாணவர்கள் செப்டம்பர் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இன்டர்ன்ஷிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் internship.mea.gov.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 27. தேர்வாகும் மாணவர்களின் பட்டியல் அக்டோபர் 7-ம் தேதி வெளியிடப்படும். ஆங்கிலத்தில் வாசிக்க யார் விண்ணப்பிக்கலாம்? இந்த இன்டர்ன்ஷிப்புக்கு விண்ணப்பிக்க சில தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. *விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். *அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். *இறுதியாண்டு இளங்கலை மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால், அவர்களின் பாடத்திட்டத்தில் இன்டர்ன்ஷிப் கட்டாயமாக இடம்பெற்றிருக்க வேண்டும். *இன்டர்ன்ஷிப் நடைபெறும் ஆண்டின் டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி விண்ணப்பதாரரின் வயது 25 அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும். மாதம் ரூ.10,000 உதவித்தொகை தேர்வு செய்யப்படும் இன்டர்ன்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், விண்ணப்பதாரரின் சொந்த மாநிலத் தலைநகரம் அல்லது அவர் படிக்கும் கல்லூரி/பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடத்திலிருந்து டெல்லிக்கு வந்து திரும்புவதற்கான ஒரு முறை விமானப் பயணச் செலவும் அமைச்சகத்தால் வழங்கப்படும். இதற்கு பொருளாதார வகுப்பு விமானக் கட்டணத்துக்கான நடைமுறையில் உள்ள உச்சவரம்பு பொருந்தும். இந்தத் தேர்வு முழுமையாக ஆன்லைன் மூலமாகவே நடைபெறும். இது முதற்கட்ட ஸ்கிரீனிங் மற்றும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேரடி நேர்காணல் என இரு நிலைகளைக் கொண்டுள்ளது இப்பயிற்சிக்குத் தமிழ் நாடு உட்பட 14 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்படுகிறார்கள். இந்த முறை மொத்தம் அதிகபட்சமாக 30 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 12-ஆம் வகுப்பு மற்றும் இளங்கலை மதிப்பெண்கள் முதற்கட்ட தேர்வுக்குப் பரிசீலிக்கப்படும். மேலும், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் குறைந்தபட்சம் 30% இன்டர்ன்ஷிப்கள் பெண்களுக்கு வழங்கப்படும் மேலும், மாற்றத்துக்கான முன்னோடி மாவட்டங்கள் திட்டம் (TADP) கீழ் வரும் மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முதற்கட்டத் தேர்வில் முன்னுரிமை வழங்கப்படும். இன்டர்ன்ஷிப்புக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் டெல்லியில் தங்குவதற்கான இடம் மற்றும் உணவுக்கான செலவுகளை தாங்களே ஏற்க வேண்டும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை