ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி போக்ஸோ வழக்கு குறித்து கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு என்னவென்று கேள்வியெழுப்பிய அமைச்சர் ராஜ்மோகன், கம்யூனிஸ்டுகள் குறித்த பட்டியல் சேகரிப்பு விவகாரத்தில் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் விஜய் நல்ல முடிவு எடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் மூடி மறைக்கப்பட்ட மிக கொடூரமான ஜெம் கிரானைட் வீரமணி போக்ஸோ வழக்கில் கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஆட்சியில் மூடி மறைக்கப்பட்ட ஜெம் கிரானைட் வீரமணி போக்ஸோ வழக்கில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்னவென்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கம்யூனிஸ்டுகளின் விவரங்களைச் சேகரிக்க மேலதிகாரிகளின் ஆலோசனையின்றி சுயமாக உத்தரவிட்ட அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் குறிப்பிட்ட எந்தக் கட்சிக்கும் எதிராகச் செயல்படும் அரசு இதுவல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனிட, “கம்யூனிஸ்டுகளின் விவரங்களை பட்டியல் சேகரிக்க சொன்ன அதிகாரியின் உத்தரவு குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், “அது யாருக்கும் தெரியாமல் ஒரு அதிகாரி எடுத்த தவறான முடிவு. அதுபோல தவறாக மேலதிகாரிகளிடம் கலந்து ஆலோசிக்காமல், எந்த தகவலும் தெரிவிக்காமல் அப்படி செய்தால் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இவர்களை எல்லாம் கணக்கிடுங்கள் என்று யார் அதிகாரம் கொடுத்தது, நாங்கள் சொன்னோமா,மேலே இருந்து நாங்கள் ஒரு முடிவு எடுக்கிறோம். மக்கள் அதை மாற்றிக் கொள்ளச் சொன்னால் மாற்றிக் கொள்கிறோம். அதை செயல்படுத்தக்கூடிய அதிகாரிகள் அவர்களாக சுயமாக இதுபோல செயல்பட்டால் நான் அதை ஏற்றுக் கொள்ளமாட்டேன். எந்த உயர்மட்ட தலைவர்களையும் கலந்து பேசாமல் அப்படி செய்தால் தவறு. இதை சட்டமன்றத்திலும் கூறியிருக்கிறோம்” என்று ராஜ்மோகன் கூறினார். சட்டம் ஒழுங்கு மற்றும் தலைவர்கள் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், சட்டம் ஒழுங்கு ஆலோசனைக் கூட்டம் மட்டும் எப்படி நடக்கும் என்றால் மூன்று மாதங்கள், 6 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும். அதில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், அதில் இப்போது இந்த அளவுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறோம், அதற்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருக்கிறதா என்று ஒரு அறிக்கை தருவார்கள். அதாவது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போன்றவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து அறிக்கை தருவார்கள். அது ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறும். அது வரைக்கும் ஏதாவது புதியதாக ஒரு அச்சுறுத்தல் இருக்கிறதா? அது போல புதிதாக யாராவது கூட்டம் கூட்டமாக வருகிறார்களா அதுதான் பிரச்னையே தவிர குறிப்பிட்டு ஒரு கட்சியை மட்டும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக மட்டுமே சிந்திக்கும் அரசாங்கம், அரசு அதிகாரிகளோ நாங்கள் கிடையாது என்பதை தெளிவுபடுத்துகிறேன்” என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு அப்பகுதியில் உள்ள மீனவர்கள், பொதுமக்கள் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், “முதலமைச்சர் விஜய் கண்டிப்பாக நல்ல முடிவு எடுப்பார். அந்த மனிதரைப் பற்றி நான் கட்சி ரீதியாக சொல்லவில்லை. அவர் ஒரு நல்ல மனிதர், அவர் எல்லாரிடமும் கலந்து பேசி ஒரு சமநிலையான முடிவு எடுப்பார். சுற்றுலாத் துறையின் ஒரு கூட்டத்தில் கூட நானும் கலை பண்பாட்டுத்துறை சார்பாக பங்கேற்றேன். அங்கே சுற்றுலாத்துறையில் கூட சுற்றுச்சூழல் பாதிக்காத அளவுக்கு சுற்றுலா திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று சொல்லக்கூடிய மனிதர் அவர். சுற்றுச்சூழல், சீரான வளர்ச்சி இதில் ஈடுபாடு உள்ளவர். அதனால், கலந்து பேசி ஒரு அறிக்கை தருவார்கள், கலந்து பேசி ஒரு சமநிலையான முடிவு எடுப்பார்” என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
ஜெம் கிரானைட் வீரமணி போக்ஸோ வழக்கு: கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு என்ன? - ராஜ்மோகன் கேள்வி
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk