தபால் அலுவலக வேலை வாய்ப்பு; ஜி.டி.எஸ், உதவி போஸ்ட் மாஸ்டர் பதவிகளில் 23,757 பணியிடங்கள்; தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் தமிழகத்தில் உள்ள தபால் நிலையங்களில் அருமையான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஜி.டி.எஸ் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், தகுதிகள், காலியிடங்களின் விவரம், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம். இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற தபால் அலுவலர் (BPM) மற்றும் உதவி தபால் அலுவலர் (ABPM/ DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். நாடு முழுவதும் மொத்தம் 23,757 காலியிடங்கள் நிரப்பப்படும். தமிழகத்தில் மட்டும் 2,095 பணியிடங்கள் நிரப்பப்படும். காலியிடங்களின் எண்ணிக்கை: 23,757 கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் எஸ்.சி/ எஸ்.டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. சம்பளம்: தபால் அலுவலர் (BPM) – ரூ.12,000 – 29,380 உதவி தபால் அலுவலர் (ABPM/ DakSevak) – ரூ.10,000 – 24,470 தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு கிடையாது. விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2026 விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவுக்கு ரூ. 100; எஸ்.சி/ எஸ்.டி மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. He is working as a Senior Sub Editor in Indian Express Tamil. He has been working in this organization for more than 4 years. He writes news related to politics, education and employment opportunities. Educational Qualification: Bachelor's Degree in Information Technology Experience: More than 5 years of experience in the news industry. Expertise: He writes education-related news ranging from school and college exams, results, and other information to exams like NEET and JEE. Additionally, he is also writing about the latest job news on TNPSC, Railways, Bank exams and Tamil Nadu and India-wide job opportunities. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
தேர்வு இல்லை; போஸ்ட் ஆபிஸ் வேலை வாய்ப்பு; 23757 பணியிடங்கள்; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk