தேநீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் அது உடல்நலத்திற்கு நல்லது என்றாலும், அதனை உட்கொள்ளும் முறையில் செய்யும் சில தவறுகள் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக உணவு உண்ட உடனே தேநீர் பருகுவது ஆரோக்கியமற்றது என்கின்றனர். உணவருந்திய உடனே தேநீர் அருந்தும்போது, உணவிலுள்ள இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவது தடைபடுகிறது. அதேபோல் அதிக சர்க்கரை சேர்த்து தேநீர் குடிக்கக் கூடாது என்கின்றனர். தேநீரில் அதிக சர்க்கரை சேர்ப்பது கலோரியை அதிகரித்து உடல் எடையைக் கூட்டிவிடும். மேலும், அளவுக்கு அதிகமான சூட்டில் தேநீர் அருந்துவது உணவுப் பாதையைப் பாதிக்கும் என்றும், உணவிற்கு மாற்றாகத் தேநீரை மட்டுமே அருந்துவது ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேநீர் பழக்கம் | நாம் செய்யும் 4 முக்கிய தவறுகள் - மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk