சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா புகார் மனு அளித்துள்ளார். அதில், ஒரே இல்லத்தில் வசித்த போது நடிகை ராதாவின் 5 செக்குகளை நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் ஆகியோர் மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ளது. நடிகை ராதா, சென்னை போரூரில் பி.ஆர் கார்டன்ஸ் என்ற பெயரில் தொழில் நடத்தி வருகிறார். தொழில் காரணங்களுக்காக வெளியூர் செல்லும்போது, அவசரக் கட்டணங்களுக்காக கையெழுத்திட்ட சில காலியான காசோலைகளை தனது அறையில் வைத்திருப்பது வழக்கம். 2025 ஆம் ஆண்டு பி.ஆர் கார்டன்ஸ் என பெயர் மாற்றப்பட்டதால், ஐ.டி.பி.ஐ வங்கியிலிருந்து புதிய செக் புக் வழங்கப்பட்டு பழைய செக் புக் பயன்பாட்டில் இல்லாமல் போனது. இனி டிராஃபிக்கில் சிக்கி முழிக்க வேண்டாம்: ரூ.436 கோடியில் மேம்பால பணி விரைவில் தொடக்கம்; நனவாகும் புதுச்சேரி மக்கள் கனவு இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17-ந் தேதி ஐ.டி.பி.ஐ வங்கியிலிருந்து ராதாவுக்கு வந்த மின்னஞ்சலில், பயன்பாட்டில் இல்லாத அவரது பழைய 5 காசோலைகள், அக்கா அம்பிகா நாயர் பெயரில் வங்கியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது . வங்கியில் தாக்கல் செய்யப்பட்ட 5 செக்குகளின் மொத்தத் தொகை சுமார் ரூ.46 கோடி ஆகும். உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவித்து அந்த செக்குகளுக்கான பண பரிவர்த்தனையை ராதா நிறுத்தியுள்ளார். வங்கியில் விசாரித்த போது, அந்த பழைய காசோலைகளில் தொகையையும் பெயரையும் நிரப்பியது ராதாவின் சகோதரரான மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் கையெழுத்து என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது ஏற்கனவே ஃபெமா சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா புகார் அளித்துள்ளார். புகார் மனுவில், ஒரே இல்லத்தில் வசித்த போது நடிகை ராதாவின் 5 செக்குகளை நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் ஆகியோர் மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ளது. இத்தகவல் ராதாவிற்கு தெரியவந்ததும் வங்கி கணக்குகளை சோதனை செய்து பார்த்த போது 5 செக்குகளில் ரூ.46 கோடி அளவில் செக் மோசடி நடந்துள்ளது முழுவதுமாக தெரியவந்துள்ளது. செக் மோசடி தொடர்பாக நடிகை ராதா நேரடியாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், இந்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Nagalekshmi Rajasekar is a Sub Editor at Indian Express Tamil, with five years of experience in the media industry. She brings strong editorial judgment and a people-centric approach to news storytelling, with a particular focus on international affairs and entertainment journalism. Experience: Since beginning her career in 2019, Nagalekshmi has worked across leading Tamil media organizations, steadily building expertise in content creation and news editing. Prior to joining Indian Express Tamil, she has contributed as a Content Writer at Maalaimalar and Kumudam, and served as a Sub Editor at DD Tamil. Her professional journey reflects a deep understanding of newsroom dynamics and audience-focused journalism. Expertise: Nagalekshmi is especially known for her strength in content writing, with the ability to present complex global developments in a clear and accessible manner. Her editorial interests also extend to women’s wellness, where she values responsible, empathetic, and informative storytelling. Qualification: She holds a postgraduate degree in Journalism from Manonmaniam Sundaranar University, which laid the foundation for her editorial skills and media ethics. With a people-friendly editorial style and a commitment to credible journalism, Nagalekshmi continues to contribute meaningfully to Tamil digital news media. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
ரூ.46 கோடி செக் மோசடி: அக்கானு கூட பாக்கல; அம்பிகா மீது ராதா பரபரப்பு புகார்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk