மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் போதைப்பொருள் பயன்பாடு தடுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் தேர்வுகளை வலியுறுத்தி மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்டு 45 நிமிட ஊடாடும் டால்காத்தான் நிகழ்வைச் சமூக ஊடகங்கள் வாயிலாக நடத்தியது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், ஞாயிற்றுக்கிழமையன்று “விக்சித் பாரதத்திற்கு போதையற்ற இளையோர்” (Nasha Mukt Yuva for Viksit Bharat) என்ற கருப்பொருளில் 45 நிமிட ஊடாடும் 'டால்காத்தான்' (Talkathon) நிகழ்வை நடத்தியது. இதில் போதைப்பொருள் பயன்பாடு தடுப்பு குறித்த திறந்த விவாதத்திற்காக நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று கூடினதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அமர்வின் மையக் கருத்தை விளக்கிய மூத்த அதிகாரி ஒருவர், "எக்ஸ் (X), இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்கள் மூலம் மாணவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதற்கான இந்த விசித்திரமான முயற்சியின் மையத்தில் ஒரு முக்கிய கருத்து உள்ளது. அதாவது 2047-இல் 'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) என்ற பார்வையை நனவாக்குவதற்கு, நாளைய இளைஞர்களாக இருந்து விக்சித் பாரதத்தின் பொறுப்பை முன்னோக்கி எடுத்துச் செல்லப்போகும் இந்த குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடம் வலுவான அடித்தளம் இருப்பது அவசியமாகும். எனவேதான் ஆரோக்கியமான மற்றும் பொறுப்பான தேர்வுகளை மேற்கொள்வது முக்கியமானதாகிறது" என்று கூறினார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். #NashaMuktYuva மற்றும் #CBSETalkathon ஆகிய ஹேஷ்டேகுகளைப் பயன்படுத்தி பிரபல சமூக ஊடக தளங்கள் வாயிலாக இது தொடர்பான வினாக்களை மாணவர்களிடமிருந்து அழைத்ததன் மூலம், கேள்விகளுக்கான பரப்பை சி.பி.எஸ்.இ விரிவுபடுத்தியது. மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நிபுணர் குழுவில், புதுடெல்லி எய்ம்ஸ் (AIIMS) மனநலத் துறையின் நந்த் குமார், நொய்டா மயூர் பள்ளியின் முதல்வர் அல்கா அவஸ்தி மற்றும் புதுடெல்லி போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் (Narcotics Control Bureau) கூடுதல் இயக்குனர் அனீஸ் சி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். Watch the CBSE Talkathon NOW and hear experts address questions from students on dealing with substance abuse.https://t.co/EMJ4t90niF#CBSETalkathon#NashaMuktYuva@EduMinOfIndia@PIB_India@PIB_Edu@AkashvaniAIR@airnewsalerts@DDNewslivepic.twitter.com/JqxnJiJxux "மனநலம் குறித்த அச்சங்கள், சகாக்களின் அழுத்தத்தை (Peer pressure) எவ்வாறு சமாளிப்பது, போதை மீட்புக்கான முக்கிய நடவடிக்கைகள் போன்றவை மாணவர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளில் அடங்கும். சமூக ஊடக தளங்களில் நேரலையாக வந்த இந்தக் கேள்விகளுக்குப் குழுவினர் பொறுமையுடன் செவிசாய்த்தனர்" என்று அந்த அதிகாரி மேலும் சேர்த்தார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
போதை தடுப்பு விழிப்புணர்வு: சி.பி.எஸ்.இ டால்கத்தான் நிகழ்வில் மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு கண்ட எய்ம்ஸ் நிபுணர்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk