இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையின் 60% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. மேற்காசியப் போர், ரூபாய் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை 8-11% உயர்வு ஆகிய காரணங்களால் கடந்த 6 மாதங்களில் 10-12% உயர்ந்த விலை மீண்டும் 7-8% வரை அதிகரிக்கலாம். இறக்குமதி வரி குறைப்பை அரசு பரிசீலிப்பது விலை நிலைமையை தீர்மானிக்க உள்ளது. மேற்காசிய போர் காரணமாக இறக்குமதி செலவுகள் அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் எண்ணெய் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 6 மாதங்களில் மட்டும் சமையல் எண்ணெய் விலை 2 தவணையாக 10 முதல் 12% வரை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு பின்னரும் இறக்குமதி செய்யப்படும் கச்சா சமையல் எண்ணெய் விலை 8 முதல் 11% அதிகரித்துவிட்டதாக இந்திய சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளன. மேற்காசிய போர் காரணமாக உலகளவில் சமையல் எண்ணெய் விலை 15% அதிகரித்துள்ளதாகவும் அந்நிறுவனங்கள் கூறியுள்ளன. இந்தியாவில் சமையல் எண்ணெய்க்கு இறக்குமதி வரியை குறைக்க அரசு பரிசீலித்து வருவதாகவும் அரசின் முடிவு அடிப்படையில் மேற்கொண்டு விலை உயர்வு இருக்கும் என்றும் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் சுமார் 60 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து பெறுகிறது. பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் ஆகியவை அதிகளவில் இறக்குமதியாகின்றன.
மீண்டும் அதிகரிக்கும் சமையல் எண்ணெய் விலை? தீபாவளி நெருங்கும் நிலையில் 7%-8% விலை உயர்வு?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk