1960-ஆம் ஆண்டு வாக்காளர்கள் பதிவு விதிகளைத் திருத்தாமல் இதைச் செய்ய முடியாது என்று ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் இருவர் மே மாதத்தில் பதிவு செய்த போதிலும், இந்த அறிவிப்பு சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. எழுதியவர்: ரித்திகா சோப்ரா அந்த மாற்றம் 'சட்டவிரோதமானது', 'அங்கீகாரமற்றது', அது அரசுக்கு அனுப்பப்பட வேண்டும். புதிய மற்றும் இளம் வாக்காளர்கள் துன்புறுத்தப்படாமல் இருக்க அது உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று இரு தேர்தல் ஆணையர்கள் எச்சரிக்கை விடுத்த போதிலும் அது புறக்கணிப்பட்டது. ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க எஸ்.ஐ.ஆர் உடன் தொடர்புடைய கேள்விகளை புதிய வாக்காளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய 'படிவம் 6'-ல் கொண்டு வந்தது தான் அந்த மாற்றம். விண்ணப்பதாரர்கள் மூன்று கூற்றுகளில் ஒன்றை தேர்வு செய்யுமாறு அதில் கேட்கப்பட்டது. 2000-களின் தொடக்கத்தில் நடைபெற்ற கடைசி எஸ்.ஐ.ஆரின் போது அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்ததா? அந்தப் பட்டியலில் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியின் பெயர் இடம் பெற்றிருந்ததா? அல்லது அவர்களின் பெயரோ அவர்களின் பெற்றோரின் பெயரோ அதில் இடம் பெறவில்லையா? இந்தப் பிரிவு கட்டாயப் பிரிவாக குறிக்கப்படவில்லை, ஆனால் இதற்குப் பதிலளிக்காமல் விண்ணப்பதாரர்கள் படிவத்தைச் சமர்ப்பிக்க முடியாது. மத்திய அரசால் தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து அறிவிக்கப்பட்ட 1960-ஆம் ஆண்டு வாக்காளர்கள் பதிவு விதிகளைத் திருத்தாமல் இதைச் செய்ய முடியாது என்று ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் இருவர் மே மாதத்தில் பதிவு செய்த போதிலும், இந்த அறிவிப்பு சேர்க்கப்பட்டதாக ' தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆராய்ந்த உள்ளக ஆவணங்கள் காட்டுகின்றன. 2 ஆணையர்கள், 1 எச்சரிக்கை மே 16 அன்று, எஸ்.ஐ.ஆர் கட்டமைப்பின் மூலம் படிவம் 6-ஐ மாற்றுவதற்கான முன்மொழிவுக்குப் பதிலளித்த தேர்தல் ஆணையர் விவேக் ஜோஷி தனது எதிர்ப்புகளைப் பதிவு செய்தார். வாக்காளர் பட்டியலின் சிறப்புத் திருத்தத்திற்கு ஆணையத்திற்கு உத்தரவிட அனுமதிக்கும் 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 21(3)-இன் கீழ் எஸ்.ஐ.ஆர், ஒரு முறை நடவடிக்கையாகவும் விதிவிலக்காகும் நடத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். எஸ்.ஐ.ஆருக்காக பரிந்துரைக்கப்பட்ட படிவங்கள் அந்தப் பயிற்சிக்கு மட்டுமே உரியவை மற்றும் அவை சட்டப்பூர்வமற்றவை அல்லது சட்டத்தின் ஒரு பகுதி அல்ல என்று அவர் எழுதினார். படிவம் 6 மற்றும் படிவம் 8 (மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்வதற்கு) சட்டப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டவை மற்றும் 1960-ஆம் ஆண்டு வாக்காளர்கள் பதிவு விதிகளில் திருத்தங்கள் செய்யாமல் மாற்ற முடியாது. எஸ்.ஐ.ஆர் உத்தரவு அல்லது வழிகாட்டுதலில் உள்ள ஒரு வாக்கியம் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட படிவத்தை மாற்றக்கூடும் என்ற யோசனையை ஜோஷி திட்டவட்டமாக நிராகரித்தார். விதிகளில் மாற்றங்களைச் செய்வதற்காக இந்த முன்மொழிவை அரசுக்கு அனுப்புவதே மிகச்சிறந்த மற்றும் சட்டப்பூர்வமாக நிலைத்திருக்கும் வழிமுறை என்பதே அவரது முடிவாக இருந்தது. படிவம் 6 மற்றும் படிவம் 8-க்கான மாற்றங்களின் வரைவை உடனடியாக ஆணையத்தின் முன் வைக்குமாறும் அவர் தெரிவித்தார். மே 19 அன்று, குழுவில் உள்ள அவரது சகாவான சுக்பீர் சிங் சாந்து, ஜோஷி கருத்திற்கு ஆதரவு தெரிவித்தார். ஜூலை 12 அன்று, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முதன்முதலில் ஆணையத்தின் இ.சி.ஐ நெட் (ECINet) போர்ட்டலில் படிவம் 6-ல் உள்ள புதிய அறிவிப்பு குறித்து செய்தி வெளியிட்டது. ஆகஸ்ட் 13 அன்று, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியைக் குறிப்பிட்டு, சாந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் ஜோஷி ஆகியோருக்கு நகல் அனுப்பி, துணைத் தேர்தல் ஆணையர் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பொறுப்புப் தலைமை இயக்குநருக்கு கடிதம் எழுதினார். படிவம் 6 என்பது விதிகளில் பொறிக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ படிவம் என்றும், தகுதியான அதிகார அமைப்பின், அதாவது அரசின் ஒப்புதல் இல்லாமல் அதை மாற்ற முடியாது என்றும் ஜோஷியின் மே 16 குறிப்பை சாந்து நினைவுகூர்ந்தார். இரண்டு தேர்தல் ஆணையர்களால் தெளிவான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் போர்ட்டலில் உள்ள படிவம் 6-ல் செய்யப்பட்ட அங்கீகாரமற்ற/ சட்டவிரோத மாற்றங்கள் நீக்கப்படவில்லை என்றும் அசல் படிவம் மீட்டெடுக்கப்படவில்லை. தகுதியுள்ள இளம் மற்றும் புதிய வாக்காளர்கள், சட்டப்படி எந்தவித துன்புறுத்தல் இன்றி வாக்காளர்களாகப் பதிவுசெய்து கொள்ள உடனடியாக மாற்றங்கள் நீக்கப்பட வேண்டும் என்று சாந்து எழுதினார். இந்த சேர்க்கையின் அர்த்தம் என்ன? ஒரு நபரின் வயது, குடியுரிமை மற்றும் வசிப்பிடத்தின் அடிப்படையில் தகுதி பெறுகிறார். அவர்களின் பெற்றோர் கடைசித் திருத்தத்தில் இடம் பெற்றார்களா என்பதால் அல்ல. மேலும், 13 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒரு கடுமையான சர்ச்சைக்குரிய எஸ்.ஐ.ஆரில், இத்தகைய கேள்வியைச் சேர்ப்பது அவர்களின் குழந்தைகள் மீதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உண்மையில், படிவம் 6-ல் உள்ள புதிய கேள்வி, கடைசி எஸ்.ஐ.ஆருக்கு பிறகு தயாரிக்கப்பட்ட பட்டியலில் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி இடம் பெறாத புதிய வாக்காளர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அத்தகைய குடும்பத்தில் உள்ள 18 வயது இளைஞர்கள் முதல் இரண்டு விருப்பங்களில் எதையும் தேர்ந்தெடுக்க முடியாது. மேலும் அவர்கள் மூன்றாவது விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால் என்ன நடக்கும் என்பதை படிவம் விளக்கவில்லை. இது முக்கியத்துவம் பெறுகிறது, ஏனெனில் படிவம் 6-ஐ மாற்றுவதற்கு ஏற்கனவே ஒரு தெளிவான வழி உள்ளது. 2021-ல், வாக்காளர்களிடமிருந்து குறிப்பிட்ட அடையாள எண்களைப் பெற ஆணையத்தை அனுமதிக்கும் வகையில் 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை நாடாளுமன்றம் திருத்தியது. படிவம் 6-ல் அந்த மாற்றம் ஆணையத்தால் மட்டுமே செய்யப்படவில்லை. ஜூன் 17, 2022 அன்று, சட்ட அமைச்சகத்தின் சட்டத் துறை வாக்காளர்கள் பதிவு விதிகள் மற்றும் படிவம் 6-ல் அதற்கேற்ப மாற்றங்களை அறிவித்தது. இந்த சட்டக் கட்டமைப்பிற்கு எதிராகவே படிவம் 6-ல் முன்மொழியப்பட்ட எஸ்.ஐ.ஆர் தொடர்புடைய மாற்றம் இந்த ஆண்டு ஆணையத்தின் முன் வந்தது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
புதிய வாக்காளர்களுக்கு புது சிக்கல்; விதியை மீறி மாற்றப்பட்ட படிவம் 6: ஆணையர்கள் கொடுத்த எச்சரிக்கை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk