2026 ஆசிய விளையாட்டும் போட்டிகள் ஜப்பனில் உள்ள அய்ச்சி-நாகோயவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா தனது மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றது. பெண்கள் கபடி அணியினர் இன்று நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் ஈரானை 37-34 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற பட்டத்தை வெற்றிகரமாகத் தக்க வைத்துக் கொண்டனர். போட்டியின் இறுதிக் கட்டத்தில் ஈரான் கடுமையாகப் போராடி மீண்டும் முன்னிலை பெற முயன்ற நிலையில், இந்திய அணி தனது நிதானத்தைத் தக்க வைத்துக் கொண்டது. ஆட்டம் முடிவதற்கு ஒரு நிமிடம் மட்டுமே இருந்தபோது, போட்டியில் நீடிக்க ஈரானுக்கு புள்ளிகள் தேவைப்பட்டன. அப்போது இந்தியாவின் சிறப்பான தடுப்பாட்டம் மூலம் அய்னாஸை (Aynaz) முக்கியமான முறையில் டாக்கிள் செய்தது. இதன் மூலம் இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. எ இறுதியில் இந்தியா 37-34 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தனது பதக்க எண்ணிக்கையில் மேலும் ஒரு தங்கத்தைச் சேர்த்தது. போட்டித் தொடர் முழுவதும் இந்தியாவின் சிறப்பான வீராங்கனைகளில் ஒருவராக விளங்கிய சஞ்சு தேவி, இறுதிப்போட்டியிலும் முக்கியப் பங்காற்றினார். ஈரானின் கடுமையான சவாலை இந்திய அணி சமாளித்து வெற்றியைப் பதிவு செய்தது. இந்த தங்கப் பதக்கத்துடன் இந்தியாவின் மொத்தப் பதக்க எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. இதில் 3 தங்கம், 11 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். செய்தி வெளியான நேரத்தில் இந்தியா பதக்கப் பட்டியலில் 12-வது இடத்தில் இருந்தது. “நான் என்ன செய்தாலும் அது ஒரு சர்ச்சையாகிவிடுகிறது!” – மேயர் பிரியா அசிய விளையாட்டு: ஸ்குவாஷ்-ல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலம் – முதல்வர் வாழ்த்து! GOLD RATE | தங்கம் விலை சற்று குறைவு – இன்றைய நிலவரம் என்ன? ஆசிய விளையாட்டு: தடகளத்தில் 44 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்றது இந்தியா! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
ஆசிய விளையாட்டு: பெண்கள் கபடியில் இந்தியா தங்கம் வென்று அசத்தல்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk