வாரத்திற்கு 35 மணி நேர வேலை.. மாற்றத் துடிக்கும் நிறுவனங்கள்!! ஜெர்மனியில் நடப்பது என்ன?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
வாரத்திற்கு 35 மணி நேர வேலை.. மாற்றத் துடிக்கும் நிறுவனங்கள்!! ஜெர்மனியில் நடப்பது என்ன?

ஜெர்மனியில் உலோகம் மற்றும் ஆட்டோமொபைல் உள்ளிட்ட சில தொழில்துறைகளில் பணிபுரியும் ஒரு ஊழியர் வாரத்திற்கு 35 மணி நேர வேலை மட்டுமே செய்ய வேண்டும் என்பதே சட்டமாக இருந்து வருகிறது. ஆனால், இதை மாற்றுவதற்கு அந்நாட்டைச் சார்ந்த கார் நிறுவனங்கள் தற்போது முயற்சித்து வரும் நிலையில், தொழிற்சங்கங்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. “வாழ, நேசிக்க, சிரிக்க அதிக நேரம் வேண்டும்” அதாவது “More time to live, love, laugh” என்ற முழக்கத்தை முன்வைத்து, வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என ஜெர்மனியின் உலோகத் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. குறிப்பாக, வாரத்திற்கு 40 மணி நேரமாக இருந்த வேலை நேரத்தை குறைத்து, 35 மணி நேரமாக மாற்ற வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. இதற்காக 1984-ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியின் உலோகத் தொழில்துறையில் சுமார் 7 வாரங்கள் நீடித்த வேலைநிறுத்தம் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களின் விளைவாக, வேலை நேரம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, 1995-ஆம் ஆண்டு முதல் வாரத்திற்கு 35 மணி நேர வேலை முறை அமலுக்கு வந்தது. எனினும், தற்போது ஜெர்மனியின் ஆட்டோமொபைல் துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, சீன நிறுவனங்களின் போட்டி, மின்சார வாகனங்களுக்கு மாறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் உள்ளிட்ட காரணங்களால் மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), BMW போன்ற கார் நிறுவனங்கள் செலவைக் குறைக்கவும், உற்பத்தியை பெருக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தச் சூழலில், ஊழியர்கள் வாரத்திற்கு 35 மணி நேரம் பணியாற்றும் நடைமுறையை 40 மணி நேரமாக உயர்த்த வேண்டும் என சில கார் நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. அதுவும் கூடுதல் ஊதியம் இல்லாமல் வேலை நேரத்தை அதிகரிப்பது தொடர்பாக பேச்சு எழுந்துள்ளது. ஆனால், இதற்கு ஜெர்மானிய தொழிற்சங்கமான ஐஜி மெட்டல் (IG Metall) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 35 மணி நேர வேலை, வாரம் தங்களுக்கு முக்கியமான உரிமை என்றும், அதை மாற்ற அனுமதிக்க முடியாது என்றும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 21-ம் தேதி, ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் கார் தொழில்துறை ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஃபோல்க்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள வோல்ஃப்ஸ்பர்க் (Wolfsburg), Audi கார் நிறுவனத்தின் இங்கோல்ஸ்டாட் (Ingolstadt) உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. மொத்தமாக, சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர், 280 இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 35 மணி நேர வேலை வாரத்தை பாதுகாப்பதுடன், 5 சதவீத ஊதிய உயர்வு மற்றும் வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழியையும் ஐஜி மெட்டல் (IG Metall) கோரியுள்ளது. இதற்கிடையே, ஊதிய பேச்சுவார்த்தைகள் அக்டோபர் 7-ம் தேதி தொடங்க உள்ளன. உடன்பாடு ஏற்படாவிட்டால், நவம்பர் 1-ம் தேதி முதல் வேலைநிறுத்தங்கள் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 40 மணி நேர வேலை வாரம் அமல்படுத்தப்பட்டால் நிறுவனங்களின் தொழிலாளர் செலவுகள் குறையும் என சில தொழில்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், தொழிற்சங்கங்கள் நீண்ட வேலை நேரம் மட்டும் ஜெர்மனியின் கார் துறையின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என வாதிடுகின்றன. இந்நிலையில் தான், தொழிலாளர் பணி நேர விவகாரம் ஜெர்மனியில் முக்கியத் தொழிலாளர் பிரச்னையாக மாறியிருக்கிறது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை