"த.வெ.க வேட்பாளர்களை தோற்கடித்தால் மட்டுமே தமிழன் மானம் உள்ளவன்": பொன். ராதாகிருஷ்ணன் ஆவேசம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
"த.வெ.க வேட்பாளர்களை தோற்கடித்தால் மட்டுமே தமிழன் மானம் உள்ளவன்": பொன். ராதாகிருஷ்ணன் ஆவேசம்

அ.தி.மு.க-வில் வென்று பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க சார்பில் போட்டியிடுபவர்களை இடைத்தேர்தலில் தோற்கடித்தால்தான் தமிழன் மானம் உள்ளவன் என்று பொன். ராதாகிருஷ்ணன் கடுமையாகப் பேசியுள்ளார். அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் த.வெ.க சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும், இல்லை என்றால் தமிழர்கள் மானம் உள்ளவர்கள் என அர்த்தம் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்று பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் த.வெ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் தமிழர்களுக்கு மானமும் சூடு சொரணையும் இருக்கிறது என்பது தெளிவாகும் என்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், ஜெம் வீரமணி விவகாரத்தில் ஈவு இரக்கமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் த.வெ.க சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும், இல்லை என்றால் தமிழர்கள் மானம் உள்ளவர்கள் என அர்த்தம் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திருச்சி மாவட்டம் சீரா தோப்பில் உள்ள இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் நினைவிடத்தில் அவருடைய உருவ சிலை திறப்பு விழா என்று நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: ஜெம் வீரமணி விவகாரத்தில் ஒரு அரசை மட்டும் குற்றம் சொல்வது பயனில்லாதது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக அந்த தவறு நடைபெற்று வந்துள்ளது. ஒரு ஆட்சியில் மட்டும்தான் நடந்ததாக நாம் கூற முடியாது. ஜெம் வீரமணி பாலியல் தொழிலிலும் ஈடுபட்டிருக்கலாம், இந்த விவகாரத்தில் ஈவு இரக்கம் பார்க்கக்கூடாது. கடுமையான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்க வேண்டும். இதன் பின்னால் யார் யார் பயன் பெற்றார்கள் என்பதையும் நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தை எந்த அமைப்பு விசாரித்தாலும் குற்றவாளிகள் தப்பவே கூடாது. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் எப்போதுமே அவமானமான விஷயம்.தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய விஷயம், அது என்ன தீர்ப்பு வருகிறதோ அதை பார்த்த பின்பு கருத்து கூறலாம். நான் 10 பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளேன். 8 தேர்தலில் தோல்வி அடைந்துள்ளேன் அதற்காக எட்டு தேர்தலையும் மறு தேர்தல் வைக்க வேண்டும் என கேட்க முடியுமா ? எஸ்.ஐ.ஆர் பல காலங்களில் நடந்துள்ளது. இதை தேர்தல் அதிகாரி மட்டும் நடத்த முடியாது. இந்தியாவில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது பூத் வரை நடத்தப்பட்டது தான் எஸ்ஐஆர். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அதிகாரிகள் இதை எப்படி செய்தார்கள் என்பதை ஆராய வேண்டும். போலியான வாக்குகள், இறந்தவர்களின் வாக்குகள் நீக்கப்பட வேண்டுமா? வேண்டாமா ? ஒரு சில இடங்களில் தவறு நடந்து இருக்கலாம், அந்த தவறை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதுதான் ஆராயப்பட வேண்டும். வெற்றி பெற்றவர்கள் ஒரு மாதத்தில் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்றால் இதற்கென்று தனி சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். எம்எல்ஏக்கள் இதுபோல் ராஜினாமா செய்தால் அவர்கள் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்கிற ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும். இதை குதிரை பேரம் என்கிறார்கள், குதிரை பேரம் மட்டும் அல்ல இது கழுதை பேரம், கழுதை பேரம் என கூறி கழுதையை கேவலப்படுத்த கூடாது. அதை விட கீழானவர்கள். இந்த இடைத்தேர்தலில் யார் வென்றாலும் பரவாயில்லை என நான் கூற மாட்டேன். ஏற்கனவே அ.தி.மு.க வெற்றி பெற்ற தொகுதி மீண்டும் அங்கு அ.தி.மு.க போட்டியிடுகிறது அவர்கள் தான் வெற்றி பெற வேண்டும். அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்று பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் வேறு கட்சியில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டால் மட்டுமே தமிழன் மானமுள்ளவன், சூடு சொரணை உள்ளவன் என்பது என்னுடைய கருத்து. பா.ஜ.க கூட்டணியில் உள்ள கட்சிகளின் இடைத்தேர்தல் ஆதரவு முடிவு குறித்தான கேள்விக்கு, அடுத்து வரக்கூடியது 2029-ல் பாராளுமன்ற தேர்தல்தான். அந்த நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கலாம் அதற்கிடையே அந்தந்த கட்சிகள் அவர்கள் கட்சியின் வளர்ச்சியில் தான் பார்ப்பார்கள். விடுதி மாணவர்களுக்கு பீஃப் வழங்க பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் வன்னி அரசு பேசியிருப்பது அவர் எங்கோ கான்ட்ராக்ட் எடுத்திருக்கிறார் என்பது தான் அர்த்தம் இது குறித்து முதல்வர் விசாரிக்க வேண்டும்.ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் மாட்டிறைச்சி தின்பார்கள் என கூறுவார்கள். ஆனால், இன்று அனைத்து சமூகத்தினரும் மாட்டிறைச்சி உண்ணுகிறார்கள் என்கிறார்கள். ஆனால், அமைச்சர் வன்னியரசு கூறுவது வேறு விதமாக உள்ளது. அவர் ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. அவர் சமூக நீதித்துறைக்கு தகுதி இல்லாத அமைச்சராக இருக்கிறார் என்றார். செய்தி: க.சண்முகவடிவேல் Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை