ஆண்டிற்கு 3 கோடி பயணிகள்; ரூ. 1,299 கோடி வருவாய்: சென்னை சென்ட்ரலை பிரம்மாண்டமாக மாற்ற தெற்கு ரயில்வே திட்டம்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️
ஆண்டிற்கு 3 கோடி பயணிகள்; ரூ. 1,299 கோடி வருவாய்: சென்னை சென்ட்ரலை பிரம்மாண்டமாக மாற்ற தெற்கு ரயில்வே திட்டம்

ஆண்டிற்கு 3 கோடி பயணிகளைக் கையாளும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை உலகத்தரத்தில் மறுசீரமைக்க மாஸ்டர் பிளான் மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆலோசகர்களுக்கு தெற்கு ரயில்வே அழைப்பு விடுத்துள்ளது. இந்திய அளவில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களில் சென்னை சென்ட்ரல் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 1,299 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஆண்டிற்கு 3 கோடிக்கும் அதிகமான பயணிகளைக் கையாளும் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், நவீன உலகத்தர வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்), சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் புதிய மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்காக 'ரயில் நில மேம்பாட்டு ஆணையம்' (ஆர்.எல்.டி.ஏ) ஆலோசகர்களை நியமிக்க டெண்டர் கோரியுள்ளது. என்னென்ன மாற்றங்கள் வரவுள்ளன? பயணிகள் வந்து செல்லும் வழிமுறைகள்: ரயில் நிலையத்திற்குள் பயணிகள் நுழையும் மற்றும் வெளியேறும் வழிகள் முற்றிலும் பிரிக்கப்படும். நடைமேடைகளுக்கான இணைப்பு, பாதசாரிகள் எளிதாக நடந்து செல்லும் வசதிகள், வாகனங்கள் வந்து செல்லும் இடங்கள் மற்றும் பார்க்கிங் வசதிகள் ஆகியவை நவீனப்படுத்தப்படும். பிற போக்குவரத்து இணைப்பு: மெட்ரோ ரயில், பேருந்து நிலையங்கள் மற்றும் பிற போக்குவரத்து முறைகளுடன் சென்ட்ரல் ரயில் நிலையம் எளிதாக இணைக்கப்படும். வணிக ரீதியிலான மேம்பாடு: ரயில் நிலையத்தை சுற்றியுள்ள ரயில்வே நிலங்கள் மற்றும் ரயில் பாதைகளுக்கு மேல் உள்ள பகுதிகளைப் பயன்படுத்தி வணிக வளாகங்கள் கட்டுவது குறித்தும் ஆய்வு செய்யப்படும். 3 மாற்று திட்டங்கள்: ஏற்கனவே உள்ள திட்டங்களுடன் சேர்த்து, குறைந்தது 3 வெவ்வேறு வகையான மாற்று அமைப்புகளை உருவாக்கித் தருமாறு ஆலோசகர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. 5 கி.மீ சுற்றளவு ஆய்வு: சென்ட்ரல் ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சாலைத் தொடர்புகள், போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முக்கியத்துவம்: ரூ. 1,299 கோடி வருவாய்: இந்திய அளவில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களில் சென்னை சென்ட்ரல் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 1,299 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 2030 இலக்கு: 2030-ம் ஆண்டிற்குள் இங்கிருந்து புறப்படும் ரயில்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க ரயில்வே நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக கூடுதல் நடைமேடைகள் (Platforms) மற்றும் பராமரிப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. தற்போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில் (2027-க்குள் முடியும் என எதிர்பார்ப்பு), தாம்பரம் மற்றும் ஆவடி ரயில் நிலையங்களைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையமும் நவீனமடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை