அக்டோபர் 2026-ல் பண்டிகைகள் மற்றும் வாராந்திர விடுமுறை காரணமாக 11 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது; ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியலைச் சரிபார்த்து வங்கிகளுக்குச் செல்ல திட்டமிடுங்கள். மாநிலங்களுக்கு ஏற்ப இந்த விடுமுறை நாட்கள் மாறுபடும் என்பதால், வங்கிக் கிளைகளுக்கு நேரில் செல்லும் வாடிக்கையாளர்கள் ஆர்பிஐ வெளியிட்ட விடுமுறைப் பட்டியலைச் சரிபார்த்துத் தங்கள் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அக்டோபர் 2026-ல் காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் பண்டிகைகள் மற்றும் சனி, ஞாயிறு வாராந்திர விடுமுறைகளை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட வங்கிகளுக்கு 11 நாட்கள் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு ஏற்ப இந்த விடுமுறை நாட்கள் மாறுபடும் என்பதால், வங்கிக் கிளைகளுக்கு நேரில் செல்லும் வாடிக்கையாளர்கள் ஆர்.பி.ஐ வெளியிட்ட விடுமுறைப் பட்டியலைச் சரிபார்த்துத் தங்கள் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அக்டோபர் 2026 மாதத்தில் வங்கிகளுக்குச் சென்று நேரடிச் சேவைகளைப் பெறத் திட்டமிடுபவர்கள், வங்கிகளின் விடுமுறைப் பட்டியலை முன்கூட்டியே தெரிந்துகொள்வது அவசியமாகும். காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி போன்ற பண்டிகைகள் மற்றும் வாராந்திர விடுமுறைகள் காரணமாக, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அக்டோபர் மாதத்தில் மொத்தம் 11 நாட்கள் வரை வங்கிகள் இயங்காது என இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) தெரிவித்துள்ளது. அக்டோபர் 2026 - முக்கிய வங்கி விடுமுறை நாட்கள்: அக்டோபர் 2 (வெள்ளிக்கிழமை): காந்தி ஜெயந்தி (இந்தியா முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை). அக்டோபர் 10 (சனிக்கிழமை): இரண்டாவது சனிக்கிழமை (நாடு தழுவிய விடுமுறை) / மஹாளய அமாவாசை (பெங்களூரு, கொல்கத்தா). அக்டோபர் 11 (ஞாயிற்றுக்கிழமை): வாராந்திர விடுமுறை. அக்டோபர் 17 (சனிக்கிழமை): மகா சப்தமி (அகர்தலா). அக்டோபர் 18 (ஞாயிற்றுக்கிழமை): வாராந்திர விடுமுறை. அக்டோபர் 19 (திங்கள்கிழமை): ஆயுத பூஜை / துர்க்கா பூஜா / மகா அஷ்டமி (சென்னை, புபனேஸ்வர், கொல்கத்தா, பட்னா உள்ளிட்ட நகரங்கள்). அக்டோபர் 20 (செவ்வாய்க்கிழமை): விஜயதசமி / தசரா (சென்னை உள்ளிட்ட பெரும்பாலான இந்திய நகரங்களில் விடுமுறை). அக்டோபர் 21 - 23: விஜயதசமி / துர்கா பூஜை தொடர் விடுமுறைகள் (கேங் டாக், கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு போன்ற குறிப்பிட்ட மாநில நகரங்களில் மட்டும்). அக்டோபர் 24 (சனிக்கிழமை): நான்காவது சனிக்கிழமை (நாடு தழுவிய விடுமுறை). அக்டோபர் 25 (ஞாயிற்றுக்கிழமை): வாராந்திர விடுமுறை. அக்டோபர் 26 (திங்கள்கிழமை): லக்ஷ்மி பூஜா / மகரிஷி வால்மீகி ஜெயந்தி (சண்டிகர், ஜம்மு, சிம்லா). அக்டோபர் 29 (வியாழக்கிழமை): கர்வா சௌத் (சிம்லா). அக்டோபர் 31 (சனிக்கிழமை): சர்தார் வல்லபாய் படேல் ஜெயந்தி (அகமதாபாத்). (குறிப்பு: மாநிலங்கள் மற்றும் பிராந்திய பண்டிகைகளுக்கு ஏற்ப விடுமுறை நாட்கள் மாறுபடும். 11 நாட்கள் விடுமுறை என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதல்ல.) இயங்கும் மற்றும் இயங்காத சேவைகள்: பாதிக்கப்படும் சேவைகள்: காசோலைகள் (Cheque) பரிவர்த்தனை, டிமாண்ட் டிராப்ட் (DD) எடுத்தல், வங்கியின் லாக்கர் சேவைகள் மற்றும் நேரடி பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும். வழக்கம்போல் இயங்கும் சேவைகள்: ஏ.டி.எம் (ATM) சேவைகள், யு.பி.ஐ (UPI) பரிவர்த்தனைகள், நெட் பேங்கிங் (Net Banking) மற்றும் மொபைல் பேங்கிங் செயலிகள் வழக்கம் போல் 24 மணி நேரமும் தடையின்றி இயங்கும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
அக்டோபரில் வங்கிக்கு போறீங்களா? இந்த 11 நாட்களைக் குறித்து வச்சுக்கோங்க; இல்லன்னா அலைச்சல் தான்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk