டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை, வசூல், முறைகேடு குறித்து புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் பார் டெண்டர் வந்துவிடும் - கோவையில் அமைச்சர் விக்னேஷ் பேட்டி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கிட்டின் 377 பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் விழா கோவை சுந்தராபுரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் மேடையில் இருந்து கீழே சென்று பயனாளிகளுக்கு பட்டா வழங்கினர். 30 ஆண்டுகாலமாக பட்டா பெறுவதற்கு காத்திருந்த பயனாளிகள் பட்டாக்களை பெற்று மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர் இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது: தனது தொகுதியில் 31 ஆண்டுகளாக பட்டா பெற முடியாமல் இருந்த சுமார் 377 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை, வசூல், முறைகேடு குறித்து புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் பார் டெண்டர் வந்துவிடும். இளைஞர்கள் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்படும் என்று பேசினார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
அடுத்த மாதம் டாஸ்மாக் பார் டெண்டர்; கோவையில் அமைச்சர் விக்னேஷ் பேட்டி
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk