செய்தியாளர் : M. மீரா மேற்கு வங்க மாநிலம் மால்பஜார் (Malbazar) பகுதியில் உள்ள தீஸ்தா ஆற்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு மீனவர்கள், வேகமான நீரோட்டத்தில் யானைக் குட்டி ஒன்று சிக்கித் தவிப்பதைப் பார்த்துள்ளனர். நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், யானைக் குட்டி தொடர்ந்து ஆற்றில் அடித்து இழுத்துச் செல்லப்பட்டது. இதைப் பார்த்த மீனவர்கள், தங்களது பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல் உடனடியாக படகை யானைக் குட்டி நோக்கித் திருப்பினர். Humanity. ❤️Fishermen rescue elephant calf from Teesta River in Gajoldoba, reunite it with mother. pic.twitter.com/uQL4EEW32L தொடர்ந்து, வேகமான நீரோட்டத்தையும் பொருட்படுத்தாமல், சுமார் 3 கிலோமீட்டர் தூரம் யானைக் குட்டியைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இறுதியாக, அதனை நெருங்கிய மீனவர்கள் பாதுகாப்பாக யானைக் குட்டியைப் பிடித்து படகில் கரைக்கு கொண்டு வந்தனர்.பின்னர், இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள், யானைக் குட்டியைப் பாதுகாப்பாக மீட்டு, அதன் தாயுடன் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில்,யானைக் குட்டியை மீட்ட பிறகு, மீனவர்கள் அதனை அன்புடன் அணைத்துக் கொண்ட காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் ஆபத்தில் சிக்கிய யானைக் குட்டியைக் காப்பாற்றிய மீனவர்களின் செயல் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
3 கி.மீ தூரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக் குட்டி.. மீனவர்களின் நெகிழ்ச்சி செயல்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk