Leopards in Coimbatore forest நீண்ட நாளாக வறண்டு கிடந்த வனப்பகுதி முழுவதும் மழைக்குப் பிறகு புதிய புல்வெளிகளும் மரங்களும் துளிர்த்து, பசுமை போர்த்திய காட்சியளிக்கிறது. கோவையின் குளுமைத் தருணம்! - பச்சைப் பசேல் மலையில் சுதந்திரமாய் வலம் வந்த சிறுத்தைகள்! கோயம்புத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக, வறண்டு கிடந்த நிலப்பரப்புகள் அனைத்தும் தற்போது புத்துயிர் பெற்று பசுமைக்கு திரும்பியுள்ளன. நீண்ட நாட்களாக வறண்டு காணப்பட்ட இப்பகுதி, தற்போது பெய்த மழையால் பச்சைப்பசேல் என மாறி இயற்கையின் எழில் கொஞ்சும் அழகோடு காட்சியளிக்கிறது. இந்த இயற்கை மாற்றமானது பொதுமக்களையும் இயற்கை ஆர்வலர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது. மழையால் வனம் புத்துயிர் பெற்றுள்ள இந்தச் சூழலில், கோயம்புத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சிறுத்தைகள் நடமாடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. பசுமை போர்த்திய காடுகளுக்குள் வன விலங்குகள் சுதந்திரமாகத் திரியும் இந்தக் காட்சிகள் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. புகைப்படக் கலைஞரின் கேமராவில் பதிவான தருணம் கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில் சமீபத்திய மழையால் வறண்ட நிலம் பசுமையாக மாறியுள்ள நிலையில், வனப்பகுதியில் சுதந்திரமாக வலம் வந்த சிறுத்தைகளின் அழகிய காட்சிகளை கானுயிர் புகைப்படக் கலைஞர் ராஜ்குமார் நாராயணசாமி தனது கேமராவில் பதிவு செய்துள்ளார்#Coimbatorepic.twitter.com/CZF2nVIvMz இயற்கையின் இந்த அழகிய மாற்றத்தையும், வன உயிரினங்களின் அரிய நடமாட்டத்தையும் கானுயிர் புகைப்படக் கலைஞர் ராஜ்குமார் நாராயணசாமி தனது கேமராவில் மிகத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார். மழையால் வளம் பெற்ற காடுகளும், அதில் சுதந்திரமாக உலா வரும் கானுயிர்களும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரம்மாண்டமான இயற்கை வளத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. வனப்பகுதிகளின் தற்போதைய இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், கானுயிர்கள் வாழ்வதற்கான இயற்கையான வாழ்விடங்களை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இந்தக் காட்சிகள் நமக்கு உணர்த்துகின்றன. செய்தி: பி. ரஹ்மான், கோவை மாவட்டம். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
மழையால் செழித்த கோவை வனம்: புகைப்படக் கலைஞரின் கேமராவில் சிக்கிய சிறுத்தைகளின் அரிய காட்சிகள்
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk