'முகமது நபி குறித்து பதிவு' - செளதியில் இலங்கை தமிழருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை மரண தண்டனையாக அதிகரிப்பு ஏன்?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
'முகமது நபி குறித்து பதிவு' - செளதியில் இலங்கை தமிழருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை மரண தண்டனையாக அதிகரிப்பு ஏன்?

பட மூலாதாரம், FACEBOOK/ANOJAN முகமது நபி தொடர்பில் பேஸ்புக் ஊடாக தவறான கருத்தை பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, செளதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை விடுதலை செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. சிவராசா அனோஜனின் விடுதலைக்கான ராஜதந்திர ரீதியிலான சகல முன்னெடுப்புக்களையும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் குடும்பத்தினர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து, ஒரு சில மணிநேரத்தின் பின்னர் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி நடாத்திய சந்திப்பின் போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இலங்கையின் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமாக விளங்கும் கதிர்காமத்திற்கு, நாட்டின் வடக்கு பகுதியிலிருந்து குழுவொன்று பாத யாத்திரை சென்றிருந்தது. இந்த பாத யாத்திரை குழுவுடன், சுப்ரமணியம் என்றழைக்கப்படும் நாய் ஒன்றையும், பாத யாத்திரையில் ஈடுபட்டவர்கள் அழைத்து சென்றிருந்தார்கள். கல்முனை பகுதி ஊடாக பாத யாத்திரை பயணித்துக் கொண்டிருந்த தருணத்தில், சுப்ரமணியம் என்றழைக்கப்படும் நாயின் மீது இஸ்லாமிய இளைஞர் ஒருவர் தாக்குதல் நடாத்தியிருந்தார். இந்த இளைஞன் நாயின் மீது தாக்குதல் நடாத்தும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதை தொடர்ந்து, இந்த விடயம் நாட்டில் பாரிய பேசுப்பொருளாகியது. இந்தநிலையில், குறித்த இளைஞன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, போலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டன. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில், குறித்த முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். End of அதிகம் படிக்கப்பட்டது நாயின் மீது தான் அறியாமல் தாக்குதல் நடாத்தியதாக தெரிவித்த இளைஞர், பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பிலான விவாதம் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக பேசுப் பொருளாகி, பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வந்திருந்தன. அவ்வாறு பதிவிடப்பட்ட பதிவொன்றில் இஸ்லாமிய நபர் ஒருவர் வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் வகையில், அனோஜன் முகமது நபி குறித்து ஆட்சேபனைக்கு உரிய வகையிலான பதிவொன்றை வெளியிட்டு, குறுகிய நேரத்தில் அந்த பதிவை அழித்திருந்தார். அவ்வாறு அனோஜன் வெளியிட்ட கருத்தை ஸ்கிரின் ஷாட் எடுத்த சிலர், அதனை பகிர்ந்து, மீண்டும் பேசுப் பொருளாக்கியிருந்தனர். அனோஜன் பதிவிட்ட பதிவு அரபு மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு, பகிரப்பட்ட நிலையில், அந்த விடயம் செளதியில் முறைப்பாடு செய்யும் அளவிற்கு பெரிதாகியது. செளதி அரேபியாவில் பணிப்புரிந்து வந்த சிவராசா அனோஜன், இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த நாட்டு போலீஸாரினால் கைது செய்யப்பட்டார். பட மூலாதாரம், PMD SRI LANKA பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு அவ்வாறு கைது செய்யப்பட்ட அனோஜன், செளதி அரேபியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவருக்கு ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனையும், 3 மில்லியன் ரியால் அபாராதமும் விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இவ்வாறு அனோஜனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை அடுத்து, அவரது பெற்றோர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக, செளதி அரேபியாவில் மேன்முறையீட்டை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர். இதன்படி, செளதி அரேபியாவில் மேன்முறையீடு செய்யப்பட்டது. மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிலையில், அனோஜனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில், செளதி நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்கள், செளதியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு நேற்று முன்தினம் கிடைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான செளதி அரேபியா தூதுவர், எதிர்கட்சித் தலைவரிடம் உறுதிப்படுத்தும் வீடியோவை, எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் நேற்று வெளியிட்டிருந்தது. அதேவேளை, தனக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக அனோஜன், தொலைபேசி ஊடாக தமது குடும்பத்தாருக்கு அறிவித்த நிலையில், இந்த விடயம் தொடர்பான தகவல்கள் வெளியாகி, நாடு முழுவதும் பேசுப் பொருளாகியிருந்தது. சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பில் தற்போது ராஜதந்திர ரீதியில் எதிர்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பட மூலாதாரம், FACEBOOK/ANOJAN செளதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் குடும்பத்தார், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை நேற்று (21) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தனர். அனோஜன் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை கேட்டறிந்துக்கொண்ட ஜனாதிபதி, அவருக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்ள அரசாங்கம் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குடும்பத்தாருக்கு குறிப்பிட்டுள்ளார். அனோஜனின் பொதுமன்னிப்பு விவகாரத்தில் அரசாங்கம் ராஜதந்திர மட்டத்தில் தலையீடு செய்வதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார். குறிப்பாக அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குடும்பத்தாரிடம் உறுதியளித்துள்ளார். பட மூலாதாரம், PMD SRI LANKA சிவராசா அனோஜனின் குடும்பத்தாருடன் கலந்துரையாடல்களை நடாத்திய ஜனாதிபதி, அடுத்த சில மணித்தியாலங்களில் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடலொன்றை நடாத்தியிருந்தார். அனோஜன் தொடர்பில் எடுக்கக்கூடிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் எடுக்கக்கூடிய ராஜதந்திர மற்றும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது. குறித்த இளைஞரின் உயிரைப் பாதுகாப்பதற்காக எடுக்கக்கூடிய எதிர்கால நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. செளதி அரேபியாவிலுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அவசியமான ராஜதந்திர தலையீடுகளை மேற்கொண்டு, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ச்சியாக தலையீடு மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. பட மூலாதாரம், Opposition Leader Media Unit செளதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் குடும்பத்தினர், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தனர். இந்த சந்திப்பின் போது, செளதி அரேபியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுடன், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தொலைபேசி மூலம் கலந்துரையாடல்களை நடாத்தியதாக கூறப்படும் வீடியோ ஒன்றை எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் வெளியிட்டிருந்தது. தான் இலங்கையிலிருந்து பதிவிட்ட ஒருவரின் பதிவுக்கு பதில் பதிவிட்டமை காரணமாகவே தனக்கு செளதி அரேபியாவில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அனோஜன், எதிர்கட்சித் தலைவரிடம் கூறியுள்ளார். தனக்கு இலங்கை சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டால், அதனை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். விடயங்களை ஆராய்ந்த எதிர்கட்சித் தலைவர், அனோஜனின் விடுதலைக்கான தன்னால் செய்யக்கூடிய உட்சபட்ட அனைத்து முயற்சிகளையும் செய்வதாக இந்த சந்தர்ப்பத்தில் உறுதி வழங்கியிருந்தார். தனது மகனான அனோஜன் செய்த தவறை மன்னித்து, அவரை விடுதலை செய்யுமாறு அனோஜனின் தாயான இராசமாணிக்கம் யோகலட்சுமி கோரிக்கை விடுக்கின்றார். தனது மகனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி, எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலரை சந்திப்பதற்காக கொழும்பிற்கு வருகைத் தந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார். ''செளதி அரசாங்கத்தை நான் மதிக்கின்றேன். என்னுடைய மகனை விடுதலை செய்து தர வேண்டும். மகன் செய்த தவறை மன்னித்து, அவரை விடுதலை செய்து தர வேண்டும். மகனுக்கு எந்த தண்டனையும் கொடுக்க வேண்டாம். உங்களை மதித்து தான் கண்ணீருடன் வந்திருக்கின்றேன். என்னுடைய மகனை மீட்டு தாருங்கள். எனது மகன் செய்த தவறை மன்னித்து, அவரை மீட்டு தருமாறு கேட்கின்றேன்'' என அனோஜனின் தாயான இராசமாணிக்கம் யோகலட்சுமி தெரிவிக்கின்றார். இதேவேளை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன், தான் வெளியிட்ட கருத்து தொடர்பில் அப்போதே வீடியோ ஒன்றை வெளியிட்டு பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார். சிவராசா அனோஜனின் விடுதலைக்காக செளதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் செளதியிடம், கோரிக்கைகளை முன்வைக்க முஸ்லிம் கட்சிகள் தயாராகி வருவதாக அறிய முடிகின்றது. இதன்படி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த கோரிக்கைக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்துக்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த கட்சி அறிவித்துள்ளது. மேலும், அனைத்து இலங்கை ஜம்இய்யத்து உலமா, தேசிய சூரா சபை மற்றும் இலங்கை முஸ்லிம் ஊடக மன்றம் உள்ளிட்ட அமைப்புக்களுக்கும் அந்த கட்சி கடிதம் அனுப்பியுள்ளது. இலங்கையிலுள்ள செளதி அரேபியா தூதரகத்தின் ஊடாக இந்த கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பட மூலாதாரம், PMD SRI LANKA மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்காக இலங்கையிலிருந்து முன்னின்று செயற்படும் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் பிபிசி தமிழுக்கு கருத்து வெளியிட்டார். இலங்கை தூதரகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு, சாதாரண சிறைத் தண்டனை மரண தண்டனை வரை அதிகரிக்கப்பட்டமைக்கான காரணம் போன்றவை தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்தார். '''இலங்கை அரசு சார்பில் நாங்கள் ஒரு மேன்முறையீட்டை செய்திருந்தோம். அதேபோல, செளதி அரேபியா தரப்பிலிருந்து குறித்த வழக்கை நடாத்துபவர்கள் அந்த வழக்கில் மேலதிகமான விடயங்களை உள்ளடக்கி, மேன்முறையீட்டை செய்திருக்கின்றார்கள். அனோஜனுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது, எனவே சாதாரண சட்டத்திற்குள் இல்லாது, ஷரியா சட்டத்தின் கீழ் இந்த வழக்கை கொண்டு வந்து அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் ஒரு மேன்முறையீட்டை செய்த காரணத்தினால், அவர்களுடைய மேன்முறையீட்டு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு சாதாரண சிறைத் தண்டனை, மரண தண்டனை வரை அதிகரிக்கப்பட்டுள்ளது' என ஜனாதிபதி குறிப்பிட்டார்'' என ராஜ்குமார் ரஜீவ்காந்த் குறிப்பிடுகின்றார். இதேவேளை, அனோஜனின் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி, குடும்பத்தாருடன் நடாத்திய சந்திப்பின் போது உறுதி வழங்கியதாக ராஜ்குமார் ரஜீவ்காந்த் கூறுகின்றார். இவ்வாறு நியமிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, சில சந்தர்ப்பங்களில் செளதி அரேபியா சென்று, அனோஜனின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்த வாய்ப்புள்ளளதாகவும் அவர் கூறினார். ''நாடாளுமன்ற குழுவொன்றை நியமித்து, அதனூடாக அனோஜனின் விடுதலை விடயத்தில் ராஜதந்திர நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இலங்கை அரசாங்கம் உறுதிமொழிகளை வழங்கியுள்ளமையினால், நாங்கள் அரசாங்கத்திடமே இந்த விடயத்தை ஒப்படைத்துள்ளோம். நாங்கள் அம்னஸ்டி இன்டர்நெஷனல் அமைப்புடன் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளோம். இந்த விடயம் தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து, இலங்கையிலுள்ள ஐநா தூதரகத்திலும் பேச்சுவார்த்தைகளை நடாத்த எதிர்பார்த்துள்ளோம்." என அவர் குறிப்பிடுகின்றார். இதேவேளை, இலங்கையின் சில பகுதிகளில் அனோஜனின் விடுதலையை கோரி, போராட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை