Atlantic hurricane season அட்லாண்டிக் சூறாவளிப் பருவம் பொதுவாக செப்டம்பர் 10-ஆம் தேதியைச் சுற்றியே உச்சம் பெறும். ஆனால், வரலாற்றில் முதல்முறையாக இந்த ஆண்டு அந்த காலகட்டத்திலும் பெருங்கடல் அமைதியாகவே இருந்தது. மொத்தமாய் அமைதியான கடல்! அட்லாண்டிக் பெருங்கடலை மிரள வைத்த எல் நினோ! (Image by AI) வானிலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு விசித்திரமான அமைதி அட்லாண்டிக் பெருங்கடலில் நிலவி வருகிறது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் கோடை மற்றும் இலையுதிர்காலத்தின் தொடக்கத்தில் கொந்தளிப்புடன் காணப்படும் அட்லாண்டிக் கடல் பகுதி, இந்த ஆண்டு செப்டம்பர் 21 வரை ஒரு சூறாவளிப் புயலைக் கூட சந்திக்காமல் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்துள்ளது. கடந்த 1914-ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்படி ஒரு தாமதம் நிகழ்வது இதுவே முதல்முறை என்பதால், உலக வானிலை ஆய்வாளர்கள் வியந்துபோய் இதைக் கவனித்து வருகின்றனர். எல் நினோ நிகழ்வானது வெப்பமண்டலப் பகுதிகளில் வளிமண்டல சுழற்சியை முழுமையாக மாற்றிவிடுகிறது. இதன் காரணமாக அட்லாண்டிக் கடலின் வளிமண்டல வான்வெளியில் செங்குத்து காற்று வெட்டு (vertical wind shear) அதிகரிக்கிறது. அதாவது, மேல் அடுக்குகளிலும் கீழ் அடுக்குகளிலும் காற்று வெவ்வேறான வேகத்திலும் திசையிலும் மாறி மாறி வீசுகிறது. வழக்கமாக செப்டம்பர் 10-ஆம் தேதியைச் சுற்றியே அட்லாண்டிக் சூறாவளிப் பருவம் அதன் உச்சகட்ட தீவிரத்தை எட்டும். ஆனால் இந்த முறையோ நிலைமையே வேறு. அட்லாண்டிக் பெருங்கடல் முற்றிலும் புயல்கள் இல்லாமல் இருக்கவில்லை என்றாலும், ஆர்தர், பெர்தா, கிறிஸ்டோபால், டாலி, எடூவார்ட் மற்றும் ஃபே (Arthur, Bertha, Cristobal, Dolly, Edouard, and Fay) போன்ற பெயரிடப்பட்ட சில சாதாரண வெப்பமண்டலப் புயல்கள் மட்டுமே உருவாயின. இவற்றில் எதுவும் பெருங்கடல் சூறாவளி பலகட்டத்தை அடையவில்லை. இந்தச் சாதனையைத் தகர்க்க 'ஃபே' (Fay) என்ற வெப்பமண்டலப் புயல் கடுமையாக முயன்றது. மணிக்கு சுமார் 70 மைல் வேகத்தில் காற்றுடன் சுழன்ற அது, சூறாவளியாக மாறுவதற்குத் தேவையான 74 மைல் வேக வரம்பை நெருங்கியது. ஆனால், அங்கு வீசிய கடுமையான காற்று வெட்டு மற்றும் வறண்ட காற்று அதனைத் தடுத்து நிறுத்தியது; இதனால் அந்தப் புயல் தனது பலத்தை இழந்து தரைமட்டமானது. தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) அறிக்கையின்படி, செப்டம்பர் 21 வரையிலான தரவுகளின்படி, சூறாவளிகள் எதுவும் இல்லை, மேலும் திரட்டப்பட்ட புயல் ஆற்றல் (ACE) சராசரியை விட தோராயமாக 93% குறைவாக உள்ளது. அதிகாரப்பூர்வ சூறாவளிப் பருவம் நவம்பர் 30 வரை நீடிக்கிறது. எனவே, ஆண்டின் எஞ்சிய நாட்களில் சாதகமான சூழல் உருவாக வாய்ப்பில்லை என்று கூற முடியாது. இருப்பினும், பசிபிக் பெருங்கடலில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பால் நடக்கும் ஒரு காலநிலை மாற்றம், அட்லாண்டிக் பெருங்கடலின் சூறாவளி உருவாக்கத்தை எவ்வாறு வியத்தகு முறையில் பாதிக்கிறது என்பதை இந்த 2026-ஆம் ஆண்டு தெளிவாக நிரூபித்துள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
அட்லாண்டிக் பெருங்கடலில் விசித்திர அமைதி: 112 ஆண்டு சாதனையை முறியடித்த 'எல் நினோ'
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk