முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின், மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிரிக்கெட் வீராங்கனை கமலினி அவர்களின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 இலட்சம் வழங்கப்படும். இவரைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். கமலினி அவர்களின் இந்த வெற்றி, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். இவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!” என்று தெரிவித்துள்ளார். நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தவேண்டும் – ஆட்சியர்களுக்கு, முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்! ஆசிய பெண்கள் கிரிக்கெட் போட்டி : இந்திய அணி 216 ரன்கள் குவிப்பு! “ஜெம் வீரமணிக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” – முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி! காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கம் – முதலமைச்சருக்கு, மாணிக்கம் தாகூர் பாராட்டு! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
தங்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி: தமிழக வீராங்கணைக்கு ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர்!
📅
📍 Madurai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk