அமைச்சர் கீர்த்தனா உடல்நிலை பற்றி எதிர்க் கட்சி ஈகோ சிஸ்டம் இப்படித்தான் சிந்திக்குமா? கனிமொழி சந்தோஷ் பதில்

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ Politics ✍️
அமைச்சர் கீர்த்தனா உடல்நிலை பற்றி எதிர்க் கட்சி ஈகோ சிஸ்டம் இப்படித்தான் சிந்திக்குமா? கனிமொழி சந்தோஷ் பதில்

மருத்துவமனை படுக்கையில் இருந்தபோதும் முதலமைச்சரின் லண்டன் பயணத்திற்கான ஏற்பாடுகள் முறையாக நடைபெறுகிறதா என்பதிலேயே அமைச்சர் கீர்த்தனாவின் கவனம் இருந்ததாக கனிமொழி சந்தோஷ் கூறியுள்ளார். முதலமைச்சர் லண்டன் பயணத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பங்கேற்காதது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் கீர்த்தனா நான்கு நாட்கள் உடல்நலக்குறைவால் பயணத்தில் பங்கேற்கவில்லை என்றும், அவரது உடல்நிலை குறித்த காரணத்தை வெளியில் கூற முடியாது என்றும் ஆதவ் அர்ஜூனா தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுகிதா சாரங்கராஜ், உடல்நிலை சரியில்லை என்று கூறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், ஆனால் ஒரு பெண் அமைச்சரின் உடல்நிலையை மாதவிடாயுடன் தொடர்புபடுத்திப் பேசுவது மிகவும் ஆபத்தான அணுகுமுறை என்றும் தெரிவித்துள்ளார். ஒரு பயணத்தில் ஒருவர் பங்கேற்காததற்கு தனிப்பட்ட காரணம் இருந்தால், அதை தனிப்பட்ட விஷயமாகவே வைத்திருக்கலாம் என்றும், ஆனால் அந்த காரணத்தை விளக்குவதற்காக பெண்களின் இயல்பான உடலியல் செயல்பாட்டை களங்கப்படுத்தும் வகையில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் சுகிதா சாரங்கராஜ் தெரிவித்துள்ளார். மாதவிடாய் என்பது பெண்களின் இயல்பான உயிரியல் நிகழ்வு என்றும், அதை ரகசியமானதாகவோ அல்லது வெளியில் சொல்லக்கூடாத விஷயமாகவோ காட்டுவது பெண்களைப் பற்றிய பழைய கால அணுகுமுறைகளை வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பல ஆண்டுகளாக பெண்கள் மாதவிடாய் குறித்த சமூகத் தடைகளையும் தயக்கங்களையும் உடைத்து வருவதாகவும், சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்கும் பெண் விளையாட்டு வீராங்கனைகள் மாதவிடாய் காலத்திலும் தேவையான முன்னேற்பாடுகளுடன் போட்டிகளில் பங்கேற்று வருவதாகவும் சுகிதா சாரங்கராஜ் தெரிவித்துள்ளார். அந்த நாட்கள் சவாலானதாக இருந்தாலும், அது பெண்களின் திறமையையோ செயல்பாட்டையையோ வரையறுப்பதில்லை என்றும், பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீடு, விவசாயம் என பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கும் இது பொருந்தும் என்றும் அவர் கூறியுள்ளார். பெண்களின் பணியிட உரிமைகள், மாதவிடாய் விடுப்பு மற்றும் பணியிடங்களில் மாதவிடாய் தொடர்பான கொள்கைகள் குறித்து உலகம் முழுவதும் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், மாதவிடாயை மறைக்க வேண்டிய விஷயமாக சித்தரிப்பது பெண்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு எதிரான மனநிலையை உருவாக்கக்கூடும் என்றும் சுகிதா சாரங்கராஜ் தெரிவித்துள்ளார். “மாதவிடாய் என்பது அவமானப்பட வேண்டிய விஷயம் அல்ல; அது பெண்களின் இயல்பான உடலியல் விவகாரம்” என்பதை அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் கீர்த்தனா குறித்து கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷும் கருத்து தெரிவித்துள்ளார். “ஒரு பெண்ணாகவும், ஒரு சகோதரியாகவும் இதை நேரில் பார்த்ததால் சொல்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ள அவர், அமைச்சர் கீர்த்தனா அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் 20 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியிருந்த நிலையிலும், நான்கு நாட்களிலேயே மீண்டும் மக்கள் பணிக்குத் திரும்பியதாக தெரிவித்துள்ளார். மருத்துவமனை படுக்கையில் இருந்தபோதும் முதலமைச்சரின் லண்டன் பயணத்திற்கான ஏற்பாடுகள் முறையாக நடைபெறுகிறதா என்பதிலேயே அமைச்சர் கீர்த்தனாவின் கவனம் இருந்ததாக கனிமொழி சந்தோஷ் கூறியுள்ளார். ஆனால், அவர் சில நாட்கள் பணிக்கு வராதது குறித்து பேசும்போது அவரது உடல்நிலை மற்றும் காயம் குறித்து சிந்திக்காமல் அதை மாதவிடாயுடன் தொடர்புபடுத்துவது வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் அவர்களின் உடல் சுழற்சியால் மட்டும் வரையறுக்கப்படுபவர்கள் அல்ல என்றும், அவர்கள் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், தாய்கள், மகள்கள் என பல்வேறு பொறுப்புகளை ஏற்று செயல்படுபவர்கள் என்றும் கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். “வலி, நோய், காயம் என அனைத்தையும் கடந்து கடமையைத் தொடர்ந்து செய்பவர்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். As a woman, I want to say this because I witnessed it myself.I met my thangai Minister Keerthana at Kamatchi Hospital after her collarbone surgery. Doctors had advised around 20 days of rest, but within 4 days she was back at work because of her commitment to the state. Even… pic.twitter.com/hQ9DpOERvL மேலும், ஒரு பெண்ணின் பணியை விமர்சிக்க முடியாதபோது அவரது உடலைப் பற்றி பேசுவது அரசியல் விமர்சனம் அல்ல என்றும், அது பிற்போக்குத்தனமான மனநிலையின் வெளிப்பாடு என்றும் கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். பெண்களை அவர்களின் சாதனைகளுக்காக மதிக்க வேண்டும் என்றும், அவர்களின் உடலை அரசியல் கேலிக்குரிய பொருளாக மாற்றுவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் கீர்த்தனாவின் உடல்நிலை தொடர்பான தனிப்பட்ட தகவலை ரகசியமாக வைத்திருக்கவே அவர் விரும்பியதை தான் அறிந்திருப்பதாகவும், ஆனால் அவரது அர்ப்பணிப்பை நேரில் பார்த்த ஒரு சகோதரியாக இதை கூற வேண்டிய கடமை ஏற்பட்டதாகவும் கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். “பெண்கள் இதைவிட சிறந்த மரியாதைக்கு உரியவர்கள். தமிழ்நாடும் இதைவிட சிறந்த அரசியல் பண்பாட்டுக்கு உரியது” என்றும் அவர் கூறியுள்ளார். செய்தி: பி. ரஹ்மான் - கோவை மாவட்டம். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை