சென்னை ஐ.ஐ.டி மற்றும் காண்ட்லாவில் உள்ள தீன்தயாள் துறைமுக ஆணையம் ஆகியவை இணைந்து 'பரிவாஹன் 2.0 – குளோபல் ஹைப்பர்லூப் கருத்தரங்கை' நடத்தியுள்ளது. அதிவேக மற்றும் நிலையான போக்குவரத்து அமைப்புகளை இந்தியாவில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது. மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் கருத்தரங்கு காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்து உரையாற்றினார். சென்னை அருகே தையூரில் அமைந்துள்ள சென்னை ஐ.ஐ.டி-யின் 'டிஸ்கவரி' சாட்டிலைட் வளாகத்தில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 19, 2026) நடைபெற்ற இந்த மாநாட்டில் அரசு, துறைமுகங்கள், ரயில்வே, தளவாடங்கள், தொழில் துறை மற்றும் கல்விச் சார்ந்த ஆராய்ச்சி அமைப்புகளைச் சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தம் இந்த மாநாட்டின் ஒரு முக்கிய நிகழ்வாக, 'ட்யூட்ர் ஹைப்பர்லூப்' (TuTr Hyperloop) மற்றும் 'லார்சன் அண்ட் டூப்ரோ' (L&T) நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஹைப்பர்லூப் சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் தொழில்துறையின் பங்கேற்பை வலுப்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய அடியாகப் பார்க்கப்படுகிறது. மாநாட்டை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்து உரையாற்றிய மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்ததாவது: "பிரதமர் நரேந்திர மோடியின் 'விக்சித் பாரத் 2047' (வளர்ச்சியடைந்த இந்தியா) தொலைநோக்குப் பார்வையின் கீழ், நவீன, தூய்மையான மற்றும் அதிவேக சரக்குப் போக்குவரத்து அமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. ஹைப்பர்லூப் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், துறைமுகங்களைச் சரக்கு முனையங்கள், தொழில்துறை பூங்காக்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளுடன் இணைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். தீன்தயாள் துறைமுக ஆணையத்தில் ட்யூட்ர் ஹைப்பர்லூப்பின் எல்.ஐ.எம் தொழில்நுட்பம் மற்றும் அதைத் தொடர்ந்து மேக்லேவ் (Maglev) தொழில்நுட்பப் பரிசோதனைகள் நடைபெற்று வருவது வரலாற்றுச் சிறப்புமிக்கது. இது ஆய்வகத்திலிருந்து துறைமுகத்திற்கும், தொழில்முனைவிலிருந்து வர்த்தக பயன்பாட்டிற்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு செல்லும் இந்திய முயற்சியாகும்." 'ஐந்தாவது போக்குவரத்து முறை' - ஹைப்பர்லூப் என்றால் என்ன? சாலை, இரயில், வான் மற்றும் நீர்வழிகளுக்குப் பிறகு ஹைப்பர்லூப் என்பது 'ஐந்தாவது போக்குவரத்து முறை' என்று அழைக்கப்படுகிறது. இது குறைந்த காற்றழுத்தம் அல்லது வெற்றிடக் குழாய்களுக்குள் (vacuum tubes) மின்காந்த விசையின் மூலம் மிதந்தபடி மிக அதிவேகமாகப் பயணிக்கும் தொழில்நுட்பமாகும். இதில் உராய்வு மற்றும் காற்று எதிர்ப்பு மிகக் குறைவாக இருப்பதால், குறைந்த நேரத்தில் பயணிகள் மற்றும் சரக்குகளை வெகு தூரம் கொண்டு செல்ல முடியும். சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் மற்றும் வல்லுநர்களின் கருத்து: சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி பேசுகையில், “ஹைப்பர்லூப் திட்டம் சென்னை ஐ.ஐ.டி-க்கு மிக நெருக்கமானது. 6 முதல் 7 துறைகளைச் சேர்ந்த 72 உறுப்பினர்கள் இணைந்து செயல்படும் ஒரு சிறந்த பன்முகத்துறைத் திட்டமாகும் இது. சொந்தமாகத் தொழில்நுட்பத்தை உருவாக்கி நிஜ உலகில் அதைச் சோதித்துப் பார்ப்பதே நமது இலக்கு. அத்துடன், இந்தியா முழுவதிலும் உள்ள ஐ.ஐ.டி-களில் ஹைப்பர்லூப் கிளப்களைத் தொடங்கி, 'ஸ்வயம்' (SWAYAM) தளத்தின் மூலம் கட்டமைப்பு, உந்துவிசை சார்ந்த திறன்பாட்டுப் பயிற்சிகளை வழங்க ட்யூட்ர் ஹைப்பர்லூப் முன்வர வேண்டும்.” என்று கூறினார். சென்னை ஐ.ஐ.டி-யின் பேராசிரியர், ஆலோசகர், சத்ய சக்ரவர்த்தி பேசுகையில், “2027-ம் ஆண்டில் நடைபெறவுள்ள 3-வது 'உலகளாவிய ஹைப்பர்லூப் போட்டி', ஐஐடி மெட்ராஸின் வருடாந்திர தொழில்நுட்ப விழாவான 'சாஸ்த்ரா' (Shaastra) உடன் இணைக்கப்பட உள்ளது. இது சர்வதேச அளவிலான மாணவர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் ஒருங்கிணைக்கப் பெரிய அளவில் உதவும்." என்று தெரிவித்தார். தீன்தயாள் துறைமுக ஆணையத்தின் தலைவர் சுஷில் குமார் சிங் பேசுகையில், “பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 2027 உலகளாவிய போட்டி, அடுத்த தலைமுறைப் போக்குவரத்து தீர்வுகளுக்கான சிறந்த தளமாக அமையும்.” என்று கூறினார். தொழில்நுட்ப அமர்வுகள் மற்றும் விவாதங்கள்: இந்த மாநாட்டில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (IIT BHU) பேராசிரியர் ஆர்.கே. ஸ்ரீவஸ்தவா 'நேரியல் தூண்டல் மோட்டார்கள்' குறித்தும், இந்திய அணுசக்தித் துறையின் மூத்த விஞ்ஞானி டாக்டர் ஷிண்டே 'காந்த மிதவை தொழில்நுட்பம்' குறித்தும் சிறப்புரையாற்றினர். மேலும், ஹைப்பர்லூப் சுற்றுச்சூழலை இந்தியாவில் உருவாக்குவது, கொள்கை முடிவுகள், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ), தானியங்கி அமைப்புகள் மற்றும் பசுமைப் போக்குவரத்து போன்ற தலைப்புகளில் 4 குழு விவாதங்களும் நடைபெற்றன. இந்த மாநாட்டில் தெற்கு இரயில்வே, பி.இ.எம்.எல் (BEML), சி.ஓ.என்.சி.ஓ.ஆர் (CONCOR), என்.டி.பி.சி.டபிள்யூ.சி (NTPCWC), எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த பல உயர் அதிகாரிகளும் வல்லுநர்களும் கலந்துகொண்டனர். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத அதிவேகப் போக்குவரத்து: சென்னை ஐ.ஐ.டி-யில் 'பரிவாஹன் 2.0' ஹைப்பர்லூப் கருத்தரங்கு
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk