Easy breakfast recipes இன்னைக்கு நம்ம இட்லி மாவு இல்லாத நேரத்துல டக்குன்னு செய்யக்கூடிய ஒரு சூப்பரான இன்ஸ்டன்ட் பிரேக்பாஸ்ட் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்க போறோம். இட்லி, தோசைக்கு பை-பை! உடனே செய்யக்கூடிய அருமையான இன்ஸ்டன்ட் டிபன்! தேவையான பொருட்கள்: ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு மற்றும் அரை கப் ரவை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழையைச் சேர்க்கவும். கூடவே கால் ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் கால் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து ஒருமுறை நன்றாகக் கிளறி விடவும். இப்போது இதில் முக்கால் கப் திக்கான தயிர் சேர்த்துக்கொள்ளவும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றி, ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல், ரொம்ப தண்ணீராகவும் இல்லாமல் ஊத்தாப்பம் மாவு பதத்திற்கு (Medium Consistency) கரைத்துக் கொள்ளவும். இப்போது சுவையான இன்ஸ்டன்ட் மாவு தயார். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், சிறிதளவு எண்ணெய் தடவவும். ஒரு கரண்டி மாவு எடுத்து ஊற்றவும். இதைக் சாதாரண தோசை போல மெலிதாகத் தேய்க்கக் கூடாது, ஊத்தாப்பம் போல சற்று தடிமனாக லேசாகப் பரப்பி விட வேண்டும். அடுப்பை மிதமான தீயில் (Medium Flame) வைத்து பொன்னிறமாக வரும் வரை வேகவிடவும். இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு நன்றாக வெந்ததும் வெளியே எடுக்கவும். அவ்வளவுதான்! இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான இன்ஸ்டன்ட் பிரேக்பாஸ்ட் ரெடி! குறிப்பு: இந்த அவசர கால காலை உணவை தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறினால் மிக அருமையாக இருக்கும். இந்த சுவையான உடனடி ரெசிபியை உங்கள் வீட்டிலும் ட்ரை செய்து பாருங்கள்! Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
ரொம்ப ஈசி, செம டேஸ்ட்: 1 கப் கோதுமை மாவுல இப்படி ஒரு பிரேக் பாஸ்ட்டா?
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk