பார்த்திபன் இயக்க தொடங்கிய முதல் படம் பல்வேறு காரணங்களால் சில முறை தள்ளிப்போனதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில் தனது திமிரை அடக்கிய படம் என்று பார்த்திபன் ஒரு படத்தை குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் ஆவதற்கு முன்பே தான் ஒரு திமிர் பிடித்த ஆளாக இருந்தேன். ஆனால் இந்த படம் வந்த பிறகு என் எண்ணத்தை மாற்றிக்கொண்ட நாம் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது என்று உணர்ந்தேன் என இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் கூறியுள்ளார். பாக்யராஜூவிடம் உதவியாளராக இருந்த பார்த்திபன் 1989-ம் ஆண்டு வெளியான புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் நாயகனாக அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல வித்தியாசனமான படங்களை இயக்கி வெற்றி கண்ட பார்த்திபன், கடைசியாக டீன்ஸ் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். மேலும் பல படங்களில், வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள பார்த்திபன், மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் படங்கள் இயக்கிய பார்த்திபன், முதலில் நடிகர் ஆக வேண்டும் என்று தான் சினிமாவில் வாய்ப்பு தேடியுள்ளார். அதன்பிறகு பாக்யராஜ் இவரை உதவியாளராக சேர்த்துக்கொண்டு, முதல் படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கொடுத்துள்ளார். அப்படி வெளியான தாவணி கனவுகள் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு இயக்குனராக வாய்ப்பு தேடி அலைந்த பார்த்திபனுக்கு முதல் படம் கிடைப்பது அவ்வளவு சிரமமாக இருந்துள்ளது. அவர் இயக்க தொடங்கிய முதல் படம் பல்வேறு காரணங்களால் சில முறை தள்ளிப்போனதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில் தனது திமிரை அடக்கிய படம் என்று பார்த்திபன் ஒரு படத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த படம் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படம் தான். இது குறித்து பேசிய பார்த்திபன், நாயகன் படம் வருவதற்கு முன்பு நான் பாக்யராஜ் சார் உதவியாளர் என்று பெரிய திமிரில் அலைந்தேன். அந்த சமயத்தில் தான் நாயகன் படம் வந்தது. நாயகன் படத்தை பார்த்த பிறகு, நாம் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது என்று நினைத்தேன். கதை, திரைக்கதை எல்லாம் தெரியும். ஆனால் ஷாட் எப்படி வைக்க வேண்டும். ஒரு ஃபிரேம்க்குள் எப்படி கதை சொல்ல வேண்டும் என்பதை நாயகன் படம் எனக்கு உணர்த்தியது என்று பார்த்திபன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. I’m ELAYARAJA D, a seasoned media professional with over 9 years of experience in digital journalism. Currently Working as a Senior Sub-Editor at The Indian Express (Tamil) since Dec 2020, I specialize in reporting on Entertainment, Sports, and Tamilnadu news. My Media journey began in 2015 as a Playout Operator and Video Editor In JM Entertainment Network (Local TV Channel) in Trichy Upto 2017. Then spent Three years as a Sub Editor In Dineseithigai Online Media (Malayalam Express Group) Upto Dec 2020 and have extensive experience Sports reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from Periyar EVR College, Trichirapalli and a Master’s in Visual Communication from Thiru.Vi.Ka Arts College Thiruvarur. Contact: d.elayaraja@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
என் திமிரை அடக்கிய படம்; நான் இன்னும் கற்றுக்கொள்ள தூண்டியது: பிரபல நடிகரின் படத்தை புகழ்ந்த பார்த்திபன்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk