திருச்சி என்.ஐ.டி.,யில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு; 2 பணியிடங்கள்; டிப்ளமோ, இன்ஜினியரிங் தகுதி; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட முழு விபரங்கள் இங்கே மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகமான, திருச்சி என்.ஐ.டி.,யில் (NIT) திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2026 தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Project Associate காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: B.E./ B.Tech./ B.Arch/ B.Plan/ Degrees in Civil Engineering படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 25,000 Project Assistant காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Diploma in Engineering & Technology in Civil Engineering படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 18,000 வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://forms.gle/S95GG8Jw3WRza6Nr5 என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2026 இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. He is working as a Senior Sub Editor in Indian Express Tamil. He has been working in this organization for more than 4 years. He writes news related to politics, education and employment opportunities. Educational Qualification: Bachelor's Degree in Information Technology Experience: More than 5 years of experience in the news industry. Expertise: He writes education-related news ranging from school and college exams, results, and other information to exams like NEET and JEE. Additionally, he is also writing about the latest job news on TNPSC, Railways, Bank exams and Tamil Nadu and India-wide job opportunities. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
திருச்சி என்.ஐ.டி வேலை வாய்ப்பு; டிப்ளமோ, இன்ஜினியரிங் தகுதி; மிஸ் பண்ணாதீங்க
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk