Bank strike September 2026 இத்தகைய சூழ்iநிலையை சமாளிக்க, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட முக்கிய வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களை வங்கிப் பணிகளை முன்கூட்டியே முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளன. செப்டம்பர் 28 முதல் வங்கி ஸ்டிரைக் ஆரம்பம்: முன்கூட்டியே வேலையை முடிக்க வங்கிகள் வார்னிங்! வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30, 2026 வரை 3 நாட்கள் வங்கி வேலைநிறுத்தம் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் வங்கிக் கிளைகளில் நேரடியாக செய்யப்படும் சில சேவைகள் பாதிக்கப்படலாம். இதனுடன் செப்டம்பர் 26-ம் தேதி மாதத்தின் 2-வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. அதற்கு அடுத்த நாள் செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை. எனவே, திட்டமிட்ட வேலைநிறுத்தம் நடைபெற்றால், செப்டம்பர் 26 முதல் 30 வரை தொடர்ந்து 5 நாட்கள் வங்கிக் கிளைகளின் சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம். செப்டம்பர் 28 முதல் வங்கி வேலைநிறுத்தம் வங்கிகளின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU) சார்பில் செப்டம்பர் 28 முதல் 30 வரை நாடு தழுவிய வேலைநிறுத்தம் முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் இந்த 3 நாட்களிலும் வங்கிக் கிளைகளில் வழக்கமான பணிகள் பாதிக்கப்படலாம். இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே அறிவுறுத்தியுள்ளன. எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வேலைநிறுத்தம் நடைபெறும் காலத்திலும் அத்தியாவசிய வங்கிச் சேவைகளை வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று SBI தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், வாடிக்கையாளர்கள் முக்கியமான வங்கிப் பணிகளை வேலைநிறுத்த தேதிகளுக்கு முன்பாகவே முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. எஸ்.பி.ஐ. தனது சமூக வலைதளப் பதிவில், வாடிக்கையாளர்கள்: வேலைநிறுத்த நாள்களுக்கு முன்பாகவே முக்கியமான வங்கிப் பரிவர்த்தனைகளை முடிக்கவும். பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏடிஎம்கள் (ATMs) மற்றும் ரொக்க வைப்பு/வழங்கும் இயந்திரங்களை (ADWMs) பயன்படுத்தவும் வாடிக்கையாளர் சேவை மையங்களைப் (Customer Service Centres) பயன்படுத்திக் கொள்ளவும் இணைய வங்கி சேவை, யோனோ (YONO), மொபைல் வங்கி, யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. யூனியன் பேங்க் வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்? வேலைநிறுத்த காலத்தில் அத்தியாவசிய வங்கிச் சேவைகள் தொடர்ந்து கிடைக்க முயற்சி செய்யப்படும் என்று யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால், செப்டம்பர் 28 முதல் 30 வரை வங்கிக் கிளைகளின் நேரடி செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளது. எனவே, வழக்கமான வங்கிப் பணிகளுக்கு மாற்று சேவைகளைப் பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. யூனியன் பேங்க் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தக்கூடிய சேவைகள்: மொபைல் பேங்கிங்இணைய வங்கிஏடிஎம் மற்றும் ADWMவணிக முகவர் (BC) மையங்கள்யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் வங்கி சேவைகள்வாடிக்கையாளர் சேவை மையங்கள் 5 நாட்கள் வங்கி விடுமுறையா? செப்டம்பர் 26-ம் தேதி 2-வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை. செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமையும் வங்கி விடுமுறை. இதையடுத்து செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்களுக்கு வேலைநிறுத்தம் முன்மொழியப்பட்டுள்ளது. எனவே, வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெற்றால், செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 30 வரை தொடர்ந்து 5 நாட்கள் வங்கிக் கிளைகளின் நேரடி சேவைகள் பாதிக்கப்படலாம். இதனால் வங்கிக் கிளைக்குச் சென்று பணம் செலுத்துதல், சில ஆவணப் பணிகள், காசோலை உள்ளிட்ட நேரடி வங்கி சேவைகள் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. ஏடிஎம், யு.பி.ஐ. வேலை செய்யுமா? வேலைநிறுத்தம் காரணமாக ஏடிஎம், யு.பி.ஐ, மொபைல் பேங்கிங் மற்றும் இணைய வங்கி சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை. வாடிக்கையாளர்கள் வழக்கமான பணப் பரிவர்த்தனைகளுக்கு ஏடிஎம், யு.பி.ஐ. மொபைல் பேங்கிங் மற்றும் இணைய வங்கியைப் பயன்படுத்தலாம். கிளையில் நேரடியாக பணம் எடுக்க வேண்டியவர்கள், வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பாகவே தேவையான பணத்தை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. அதேபோல், கடைகளில் பணம் செலுத்துதல், ஒருவருக்கு பணம் அனுப்புதல் போன்ற கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லாத பரிவர்த்தனைகளுக்கு UPI மற்றும் பிற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகளைப் பயன்படுத்தலாம். முக்கிய குறிப்பு: செப்டம்பர் 28 முதல் 30 வரை நடைபெறவுள்ள வங்கி வேலைநிறுத்தம் தற்போது முன்மொழியப்பட்ட வேலைநிறுத்தமாகும். அது இறுதியாக நடைபெறுமா என்பது தொடர்பான அறிவிப்புகளை வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ தகவல்களில் சரிபார்ப்பது அவசியம். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
செப்டம்பர் 28 முதல் வங்கி ஸ்டிரைக் ஆரம்பம்: எஸ்.பி.ஐ, யூனியன் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk