மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஜெம் கிரானைட்ஸ்’ ஆர்.வீரமணி எளிய குடும்பங்களை சேர்ந்த மற்றும் ஆதரவற்ற 100 க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளன. சமூகத்தின் பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் பணத் திமிரோடு வலம் வருபவர்கள் எவ்வளவு இழிவான குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு “ஜெம்” வீரமணி மீதான குற்றச்சாட்டுக்கள் எடுத்துக்காட்டு. காணொளி ஆதாரத்தில் அடையாளத்தை நிறுவ இயலவில்லை என்ற காரணம் கூறப்பட்டு வழக்கை முடிக்க இருந்த நிலையில், போக்சோ நீதிமன்றம் அதை ஏற்காமல், 2026 ஜூன் 19ம் தேதி மறு விசாரணைக்கு உத்தரவிட்டது என்பது வரவேற்புக்குரியது. போக்சோ நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்திருக்காவிட்டால் இவ்வளவு பெரிய கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் தப்பித்து இருப்பார்கள்.அதனைத்தொடர்ந்து தவெக அரசாங்கம் வீரமணியை கைது செய்துள்ளதோடு, குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தையே உலுக்கியுள்ள பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள், துணை நின்றவர்கள், மறைக்க முயற்சித்தவர்கள் எவராயினும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இப்பிரச்சினையில், தமிழ்நாடு அரசால் காவல்துறை ஆணையர் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. செல்வாக்கு மிக்க மனிதர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில், ஏற்கெனவே அவர்கள் தப்பித்து செல்லும் வழிகள் உருவாக்கப்பட்ட அனுபவம் உள்ள சூழலில், காவல் ஆணையர் மேற்பார்வையிலான விசாரணை என்பது பொருத்தமானதல்ல. ஆகவே, உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை, சிற்பக்கலைக் கல்லூரியில் முதுகலை படிப்புகள் தொடக்கம்! நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தியைப் பயன்படுத்தக் கோரிய மனு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி! “திமுகவும், அதிமுகவும் கொள்கைக்கு மாறாக ஆட்சியமைக்கத் திட்டம் தீட்டியதால் கட்சியைவிட்டு வெளியேறினேன்” – மரகதம் குமரவேல்! இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
ஜெம் வீரமணி வழக்கு : உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தேவை – பெ. சண்முகம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk