த.வெ.க கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் 15 புதிய துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் ஒரு மாவட்டச் செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்; அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களுக்குக் முக்கியப் பொறுப்புகள் வழங்கி தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்த புதிய நியமனங்களில் பெரும்பான்மையாக அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்கள் இடம்பெற்றிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் சுவாரஸ்யத்தையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 15 புதிய துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் ஒரு மாவட்டக் கழகச் செயலாளரை நியமித்து கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த புதிய நியமனங்களில் பெரும்பான்மையாக அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்கள் இடம்பெற்றிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் சுவாரஸ்யத்தையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் 15 புதிய துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் ஒரு மாவட்ட கழகச் செயலாளர் நியமிக்கப்படுவதாகக் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் பெரும்பான்மையாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. 15 புதிய துணைப் பொதுச் செயலாளர்கள் பட்டியல்: 1.எம்.எஸ்.எம். ஆனந்தன் (முன்னாள் அமைச்சர், திருப்பூர் வடக்கு) 2.எம்.சி.சம்பத் (முன்னாள் அமைச்சர், கடலூர்) 3.கே.இராதாகிருஷ்ணன் (முன்னாள் அமைச்சர், உடுமலைப்பேட்டை) 4.கே.வி.இராமலிங்கம் (முன்னாள் அமைச்சர், ஈரோடு மேற்கு) 5.எம்.ஆனந்தன் (முன்னாள் அமைச்சர், உளுந்தூர்பேட்டை) 6.கடம்பூர் ராஜு (முன்னாள் அமைச்சர், கோவில்பட்டி) 7.கே.டி.பச்சைமால் (முன்னாள் அமைச்சர், கன்னியாகுமரி) 8.வெல்லமண்டி என்.நடராஜன் (முன்னாள் அமைச்சர், திருச்சி கிழக்கு) 9.என்.ஆர்.சிவபதி (முன்னாள் அமைச்சர், முசிறி) 10.வைகைச்செல்வன் (முன்னாள் அமைச்சர், விருதுநகர்) 11.எஸ்.வளர்மதி (முன்னாள் அமைச்சர், ஸ்ரீரங்கம்) 12.டாக்டர் ஜே. சந்தீப் ஆனந்த் (சென்னை) 13.கே.ஜி.முத்து வெங்கடேஸ்வரன் (திருப்பூர்) 14.தொள்ளமூர் கண்ணன் (விழுப்புரம்) 15.வி.சி.ஆர்.குமரன் (திருவள்ளூர்) புதிய மாவட்டச் செயலாளர் நியமனம்: மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழகம் புதிதாக உருவாக்கப்பட்டு, அதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சி.மகேந்திரன் மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நிர்வாகிகள் அனைவரும் த.வெ.க தலைவர் விஜய்யின் வழிகாட்டுதலின்படியும், பொதுச் செயலாளர் என்.ஆனந்தின் ஆலோசனையின்படியும் ஏற்கனவே உள்ள நிர்வாகிகளுடன் இணைந்து கழகப் பணிகளை மேற்கொள்வார்கள் என்றும், கழகத் தோழர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
த.வெ.க-வில் மேலும் 15 துணைப் பொதுச் செயலாளர்கள் நியமனம்: அ.தி.மு.க மாஜி அமைச்சர்களுக்கு ஜாக்பாட்
📅
📍 Tiruppur, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk