இந்தியா மீது அமெரிக்கா 100% வரி விதித்தால் என்ன நடக்கும்?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
இந்தியா மீது அமெரிக்கா 100% வரி விதித்தால் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images செப்டம்பர் 16 அன்று, லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் இரான் சட்டத்த்திற்கு 262 க்கு 159 என்ற வாக்குகள் கணக்கில் அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அமெரிக்க செனட் இந்த மசோதாவை ஆகஸ்ட் 7 ஆம் தேதி நிறைவேற்றியது. அதிபர் டொனால்ட் டிரம்ப் அதில் கையெழுத்திட்டார். தற்போது இந்தியா மீது 100 சதவீதம் வரை வரி விதிக்கும் உரிமையை டிரம்ப் பெற்றுள்ளார். "சீனாவும் இந்தியாவும் தங்கள் அணுகுமுறையை மேம்படுத்தி, வேறு எங்கிருந்தோ எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்க வேண்டும்" என்று மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு பேசிய ஜனநாயகக் கட்சியின் எம்.பி ரிச்சர்ட் புளூமெண்டல் பகிரங்கமாக கூறினார். இந்த வரிகளை எப்போது, ​​எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்க டிரம்ப்பிற்கு பரந்த அதிகாரத்தை இந்த சட்டம் வழங்குகிறது. இந்தியப் பொருட்களின் அமெரிக்க இறக்குமதிச் செலவை அதிகரிக்கக் கூடிய வரிகளை அவர் எப்போது விதிக்கப் போகிறார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த சட்டம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ரஷ்யாவுடனான வர்த்தக ஒப்பந்தங்களையும் ஆராயும் நேரத்தில், அழுத்தம் கொடுப்பதற்கான டிரம்பின் செல்வாக்கை இது அதிகரிக்கக்கூடும். ஆகஸ்ட் 2026 வரை சீனாவிற்கு அடுத்தபடியாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா இருந்தது. எனவே, இந்த இரண்டு ஆசிய நாடுகளும் அமெரிக்க வரிகளால் அதிகம் பாதிக்கப்படலாம். பட மூலாதாரம், Getty Images டிசம்பர் 2022 முதல் ஆகஸ்ட் 2026 வரை, ரஷ்யாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சீனாவின் பங்கு 50 சதவீதமாகவும், இந்தியாவின் பங்கு 37 சதவீதமாகவும் இருந்தது. மசோதா நிறைவேற்றப்பட்ட உடனேயே இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த விவகாரத்தை அமெரிக்காவிடம் எழுப்பியிருப்பதாகவும், இருதரப்பு உறவுகளில் மட்டுமின்றி சர்வதேச எரிசக்தி சந்தையிலும் ஏற்படக்கூடிய தாக்கத்தை சுட்டிக்காட்டியதாகவும் அது கூறியுள்ளது. End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு ஜூலை 2026 இன் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 51%க்கும் மேலான பங்கை ரஷ்யா கொண்டுள்ளது. ஹோர்மூஸ் நீரிணை வழியாக எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில், 30 நாட்களுக்குள் ரஷ்ய எண்ணெயைச் சார்ந்திருப்பதை இந்தியா கணிசமாகக் குறைப்பது கடினமாக இருக்கலாம். இரண்டு தெரிவுகளுமே இந்தியாவுக்கு கடினமானவை. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் பட்சத்தில், டிரம்பின் வரிவிதிப்பின் பாதிப்பை சந்திக்க நேரிடும். வரி விதிப்பைத் தவிர்ப்பதற்காக, ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்தால், அது அமெரிக்காவின் அழுத்தத்திற்குத் திரும்பத் திரும்ப அடிபணிந்ததாகவே பார்க்கப்படும். ஹோர்மூஸ் நீரிணை வழியாக எண்ணெய் இயக்கம் சீர்குலைந்து கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஒரு பீப்பாய்க்கு $100 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளதால், புதிய எண்ணெய் ஆதாரங்களைக் கண்டுபிடிப்பது இந்தியாவுக்கு செலவு பிடிப்பதாக அமையும். இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 100% வரி விதித்தால் அது பெரும் அடியாக இருக்கும். இது இந்திய பொருட்களை இறக்குமதி செய்ய ஆகும் செலவை அமெரிக்காவுக்கு கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கும் மற்றும் பல இந்திய பொருட்களை வணிக ரீதியாக போட்டியற்றதாக மாற்றும். உடனடி சுமை முதன்மையாக இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் அவர்களது பணியாளர்கள் மீது விழும். அதேநேரத்தில், அமெரிக்க இறக்குமதியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் அதிக விலை அல்லது வரையறுக்கப்பட்ட தேர்வுகளை எதிர்கொள்ளலாம். அமெரிக்கா வரிகளை உயர்த்தினால், அந்த வரி அமெரிக்க இறக்குமதியாளர்களிடமிருந்தே வசூலிக்கப்படும். ஆனால் நடைமுறையில், இது இந்தியாவின் ஏற்றுமதியை நேரடியாக பாதிக்கும். இந்தியா ஏற்கனவே வர்த்தக பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. ஒரு அமெரிக்க இறக்குமதியாளர் இந்தியாவில் இருந்து $20 மதிப்புள்ள ஆடைகளை வாங்கினால், 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும் பட்சத்தில், எல்லையில் $20 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். உள்நாட்டுப் போக்குவரத்து, சில்லறை விற்பனைக்கான லாப வரம்புகள் மற்றும் பிற வரிகள் பின்னர் சேர்க்கப்படுகின்றன. அதே தயாரிப்பை வேறொரு நாட்டிலிருந்து கணிசமாக குறைந்த விலையில் பெற முடிந்தால், இந்தியாவில் இருந்து விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு அமெரிக்க இறக்குமதியாளருக்க எந்த காரணமும் இருக்காது. ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதலில் கணிசமான குறைப்பு மற்றும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா சலுகைகளை கோரும் என எதிர்பார்க்கலாம் என டெல்லியை சேர்ந்த சிந்தனையாளர் குழுவான உலகளாவிய வர்த்தக ஆய்வு முன்முயற்சி (Global Trade Research Initiative - GTRI) இயக்குநர் அஜய் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் "தற்காலிக வரி நிவாரணத்திற்கு ஈடாக இந்தியா தனது எரிசக்தி பாதுகாப்பை சமரசம் செய்யக்கூடாது. வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ அல்லது ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தவோ கூடாது. ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற முக்கிய பங்குதாரர்களுடன் வர்த்தக ஒப்பந்தங்களை எட்டிய பின்னரும் அமெரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது. எனவே, தனது எரிசக்தி கொள்கையில் அமெரிக்கா ஆணையிட இந்தியா அனுமதிக்கக் கூடாது." என்றார். "சலுகை விலையில் கிடைக்கும் ரஷ்ய கச்சா எண்ணெய் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவை குறைக்கவும், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் உதவியது. எனவே, ரஷ்ய எண்ணெய் வணிக ரீதியாக போட்டித்தன்மையுடன் இருக்கும் வரை, இந்தியா தொடர்ந்து அதை வாங்க வேண்டும் மற்றும் ஒருதலைப்பட்ச வர்த்தக சலுகைகளை வழங்காமல் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். பட மூலாதாரம், Getty Images உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக இருந்தது. 2047-க்குள், அதாவது பிரிட்டனிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைவதற்குள், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பிரதமர் நரேந்திர மோதி இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை அடைய, அடுத்த இருபது ஆண்டுகளில் இந்தியா சராசரியாக ஆண்டு பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதத்தை எட்ட வேண்டும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் நம்புகின்றனர். டிரம்பின் கொள்கைகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கலாம். இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா உள்ளது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் இந்திய நிறுவனங்கள் 87 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளன. இது இந்தியாவின் மொத்த ஏற்றுமதியான 438 பில்லியன் டாலர்களில் கிட்டத்தட்ட 20 சதவீதம் ஆகும். இந்தியாவில் பெரிய அளவிலான உள்நாட்டுச் சந்தை இருப்பதாலும், அது இறக்குமதியைச் சார்ந்த பொருளாதாரமாகக் கருதப்படுவதாலும், ஆசியப் போட்டியாளர்களை விட வரிகள் தொடர்பான பாதிப்புகளுக்கு இந்தியா குறைவான அளவே ஆளாகிறது என்றும் வாதிடப்படுகிறது. டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள் மற்றும் பாகிஸ்தானுடனான அவரது நெருக்கம் அதிகரித்தது ஆகியவை, ஒரு நம்பகமான மூலோபாயக் கூட்டாளியாக அமெரிக்கா மீதான இந்தியாவின் நம்பிக்கையைச் பலவீனப்படுத்தியுள்ளன. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறது; மத்திய கிழக்கிலிருந்து வரும் எண்ணெய் விநியோகத்தை இரான் போர் பாதித்துள்ள நிலையில், ரஷ்யா மீதான இந்தியாவின் சார்ந்திருக்கும் நிலை மீண்டும் அதிகரித்துள்ளது. உலகளாவிய கடல்சார் தரவு நிறுவனமான 'கேப்ளர்' (Kpler)-இன் தகவல்களின்படி, இந்த கோடைக்காலத்தில் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்ய கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட பாதியளவைக் கொண்டிருந்தது. இந்தியாவை விட அதிக அளவில் ரஷ்ய எண்ணெயை வாங்கும் சீனாவும் இந்த புதிய சட்டத்தின் வரம்பிற்குள் வருகிறது. புதுடெல்லி மீது அமெரிக்கா செலுத்திய அதே அழுத்தத்தை சீனா மீதும் செலுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பட மூலாதாரம், Getty Images அமெரிக்கா மீதான வர்த்தகச் சார்ந்திருத்தலைக் குறைக்க இந்தியா முயற்சித்து வருகிறது. இதை அடைவதற்கான ஒரு வழியாகவே சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் பார்க்கப்படுகின்றன. இருப்பினும், அமெரிக்கச் சந்தைக்கு மாற்றாக இவை உடனடியாக அமைந்துவிட முடியாது. இந்தியா-பிரிட்டன் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் 2026 ஜூலை 15 அன்று நடைமுறைக்கு வருகிறது. இதன் கீழ், இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் 99 சதவீதத்திற்கு பிரிட்டன் வரி இல்லாத அணுகலைப் பெறுகிறது. இந்தியா-ஓமன் வர்த்தக ஒப்பந்தமும் நடைமுறைக்கு வந்துள்ளது; இதன் கீழ் ஓமன் தனது வரி விதிப்புப் பிரிவுகளில் 98.08 சதவீதத்திற்கு பூஜ்ஜிய வரி அணுகலை வழங்கியுள்ளது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) நடைமுறைக்கு வரும்போது அனைத்து இந்திய ஏற்றுமதிகளுக்கும் பூஜ்ஜிய வரி அணுகலை வழங்குகிறது; இது அக்டோபர் 20 அன்று நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், வரி விதிப்புப் பிரிவுகளில் 96.8 சதவீதத்திற்கு முன்னுரிமை அணுகலை வழங்குகிறது; இது இந்தியாவின் ஏற்றுமதியில் 99.5 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் அமெரிக்கச் சந்தைக்கு மாற்றாக அமைய முடியாது என்றாலும், பிற முக்கிய சந்தைகளுக்குள் நுழைவதற்கான செலவைக் குறைக்க இவை உதவக்கூடும். சுங்க வரிச் சலுகைகள் மட்டுமே இந்தச் சந்தைகளுக்கான அணுகலை உறுதி செய்யாது. இந்திய ஏற்றுமதியாளர்கள் தளவாடங்களில் முதலீடு செய்ய வேண்டும், தொழில்நுட்ப மற்றும் தயாரிப்புத் தரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும், தங்கள் வடிவமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும், மற்றும் விநியோக வலைப்பின்னல்களைக் கட்டியெழுப்ப வேண்டும். இந்தத் திறன்கள்தான் அமெரிக்கச் சந்தையில் அவர்கள் காலூன்ற உதவின. அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் "ஏற்றுமதிச் சந்தைகளைப் பன்முகப்படுத்துவதற்கு ஒரு வரம்பு உண்டு. சந்தைகளைப் பன்முகப்படுத்துவதற்கு வாடிக்கையாளர் தளத்தையும் விரிவுபடுத்த வேண்டும்." என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை