இந்தியாவில் ஆன்லைன் விற்பனை தளங்கள் விதிமீறல்களில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் விதிமீறல்களில் ஈடுபடும் இணைய விற்பனை தளங்களுக்கு, அபராதம் விதிக்கும் நடவடிக்கையை உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தொடங்கியுள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்ட விதிமீறல்களுக்காக, அமேசான், பிளிப்கார்ட், ஸ்விக்கி, இன்ஸ்டாமார்ட், பிக் பாஸ்கட் மற்றும் ஜெப்டோ ஆகியவற்றுக்கு, அபராதம் விதிக்கப்படுவதாக அவ்வாணையம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களாக உணவு வணிக நிறுவனங்கள் மற்றும் இணைய விற்பனை தளங்கள் மீது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், தனது நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
’தடைசெய்யப்பட்ட பொருட்களை..’ அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட Online தளங்களுக்கு அபராதம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk