555-day FD interest rates வட்டி விகிதங்கள் மாறுதலுக்கு உட்பட்டவை என்பதால், முதலீட்டாளர்கள் எப்டி கணக்கைத் தொடங்குவதற்கு முன் அந்தந்த வங்கியின் சமீபத்திய வட்டி விகிதங்களைச் சரிபார்ப்பது நல்லது. ஃபிக்சட் டெபாசிட் போடுறீங்களா? 555 நாள் திட்டத்தோட லேட்டஸ்ட் வட்டி நிலவரம்! (Image: AI) சந்தை அபாயங்கள் இல்லாமல் நிலையான லாபம் ஈட்ட விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஃபிக்சட் டெபாசிட் (FD) எப்போதும் ஒரு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. வழக்கமான எப்.டி-களை விட, சில சிறப்பு கால அவகாசங்கள் கொண்ட எப்டி-கள் அதிக லாபகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. அந்த வகையில், 555 நாட்கள் கால அவகாசம் கொண்ட சிறப்பு எப்டி திட்டங்களுக்கு சில வங்கிகள் பொதுமக்களுக்கு 7.25% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 7.50% வரையிலும் வட்டி வழங்குகின்றன. முக்கிய வங்கிகளின் 555 நாள் எப்டி வட்டி விவரங்கள் பின்வருமாறு: சிட்டி யூனியன் வங்கி: பொதுமக்களுக்கு 7.25% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.50% வட்டியும் வழங்குகிறது. பொதுமக்களுக்கு 7.00% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.40% வட்டியும் வழங்குகிறது. பொதுமக்களுக்கு 6.75% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.25% வட்டியும் வழங்குகிறது. பொதுமக்களுக்கு 6.65% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.15% வட்டியும் வழங்குகிறது. பொதுமக்களுக்கு 6.60% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.10% வட்டியும் வழங்குகிறது. பொதுமக்களுக்கு 6.55% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.05% வட்டியும் வழங்குகிறது. (குறிப்பு: மேற்கண்ட தரவுகள் செப்டம்பர் 16, 2026 தேதியிட்ட பைசாபசார் (Paisabazaar) தரவுகளின்படி வழங்கப்பட்டுள்ளன. வட்டி விகிதங்கள் மாறுதலுக்கு உட்பட்டவை என்பதால், முதலீட்டாளர்கள் எப்டி கணக்கைத் தொடங்குவதற்கு முன் அந்தந்த வங்கியின் சமீபத்திய வட்டி விகிதங்களைச் சரிபார்ப்பது நல்லது.) ஃபிக்சட் டெபாசிட் மீதான டிடிஎஸ் (TDS) விவரங்கள்: 60 வயதுக்குட்பட்ட பொதுமக்களுக்கு, ஒரு நிதியாண்டில் ஈட்டப்படும் மொத்த வட்டித் தொகை ரூ. 50,000-ஐத் தாண்டும்போது வட்டி வருமானத்தின் மீது டிடிஎஸ் (TDS) பிடிக்கப்படும். 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, ஒரு நிதியாண்டில் வட்டி வரம்பு ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரம்புகள் தொடர்புடைய டிடிஎஸ் விதிகளின் கீழ் வரும் மொத்த வட்டி வருமானத்திற்குப் பொருந்தும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
555 நாள் எப்.டி.ல இவ்வளவு வட்டியா? டாப் வங்கிகள் லிஸ்ட் இதோ
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk