ஆனைமலை புலிகள் காப்பகம், கோவை வனக்கோட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட சோளக்கரை வனப்பகுதியில் காயத்துடன் தவித்துவந்த குட்டி யானை ஒன்று, ஊனுண்ணி வனவிலங்கு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மதுக்கரை வனப்பகுதியில் காலில் காயத்துடன் தவித்துவந்த குட்டி யானை, வேட்டை விலங்கு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தது. ட்ரோன் மூலம் கண்காணித்து வந்த வனத்துறையினர் நடத்திய உடற்கூறாய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம், கோவை வனக்கோட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட சோளக்கரை வனப்பகுதியில் காயத்துடன் தவித்துவந்த குட்டி யானை ஒன்று, ஊனுண்ணி வனவிலங்கு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தது. கேரள எல்லையிலிருந்து வந்த யானைக் கூட்டத்துடன் இருந்த இந்த குட்டி யானையை வனத்துறை மற்றும் மருத்துவக் குழுவினர் ட்ரோன்கள் மூலம் கண்காணித்து வந்த நிலையில், உடற்கூறாய்வில் ஆழமான காயம் இருந்தது கண்டறியப்பட்டு முதற்கட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 18-ம் தேதி காலை 10.30 மணி அளவில், கேரள மாநில வனப்பகுதியில் இருந்து தமிழ்நாடு வன எல்லைக்குள் 3 பெண் யானைகள் மற்றும் ஒரு குட்டி யானை என 4 யானைகள் கொண்ட கூட்டம் நுழைந்து, மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி சரகப் பகுதிக்குள் வந்தது. அப்போது, அந்த யானைக் கூட்டத்தில் இருந்த குட்டி யானை ஒன்று பின்புற காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் சிரமத்துடன் நடந்து வந்ததை வனத்துறையினர் கவனித்தனர். இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்படி, மதுக்கரை வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் குட்டி யானையின் உடல்நிலை மற்றும் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். செப்டம்பர் 18 முதல் 22 வரை பகல் நேரங்களில் வனத்துறை தனிப்படை குழுவினரும், இரவு நேரங்களில் அதிநவீன ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் குட்டி யானையின் நிலைமை கண்காணிக்கப்பட்டது. குட்டி யானைக்குச் சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் அருகில் செல்ல முயன்றபோதெல்லாம், அதனுடன் இருந்த 3 பெண் யானைகளும் குட்டி யானையைச் சூழ்ந்து கொண்டு யாரையும் அருகில் அனுமதிக்கவில்லை.இந்நிலையில், செப்டம்பர் 22 இரவு ட்ரோன் மூலம் கண்காணித்த போது, குட்டி யானை ஒரே இடத்தில் அசைவற்று இருப்பதும், அதன் அருகில் இருந்த மற்ற யானைகள் அங்கு இருந்து சென்று விட்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து, செப்டம்பர் 23 காலை மதுக்கரை வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த போது, அந்த குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது உறுதி செய்யப்பட்டது. மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்படி, கோவை உதவி வனப் பாதுகாவலர் தலைமையில், வனச் குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், கோவை வனக்கோட்ட வனக் கால்நடை மருத்துவர், எட்டிமடை உதவி கால்நடை மருத்துவர் மற்றும் WNCT, WWF-India, 'ஓசை' உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் குட்டி யானையின் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனையின் போது, குட்டி யானையின் உடலின் பல்வேறு பகுதிகளில் மிக ஆழமான துளைக் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. காயங்களின் தன்மை மற்றும் ஆய்வின் அடிப்படையில், காட்டில் வாழும் ஏதேனும் ஒரு ஊனுண்ணி வனவிலங்கு தாக்கியதாலேயே அந்த குட்டி யானை உயிரிழந்து இருக்கலாம் என வனத்துறை முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. செய்தி: பி.ரஹ்மான் - கோவை Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
3 பெண் யானைகள் பாதுகாப்பு; இறுதியில் சோகம்: மதுக்கரையில் வேட்டை விலங்கு தாக்கியதில் குட்டி யானை பரிதாப பலி
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk