ரயில்களில் முன்பதிவுப் பட்டியல் தயார் செய்யப்பட்ட பிறகும் காலியாக இருக்கும் இருக்கைகளைக் கண்டறிந்து, தத்கால் கட்டணம் இன்றி ஐ.ஆர்.சி.டி.சி செயலி மூலம் உறுதியான டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? இதோ எளிய வழிகாட்டல். தட்கல் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி ஐ.ஆர்.சி.டி.சி ரயில் கனெக்ட் செயலியின் 'சார்ட் வேகன்ஸி' மற்றும் 'கரண்ட் புக்கிங்' வசதிகளைப் பயன்படுத்தி, இந்த காலி இருக்கைகளைக் கண்டறிந்து சில நிமிடங்களில் உறுதியான டிக்கெட்டைப் பெறலாம். இந்திய ரயில்களில் கடைசி நேரத்தில் பயணச்சீட்டு கிடைப்பது கடினமாக இருக்கும் சூழலில், சார்ட் தயார் செய்யப்பட்ட பிறகும் கூட பல ரயில்களில் இருக்கைகள் காலியாக இருக்க வாய்ப்புள்ளது. தட்கல் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி ஐ.ஆர்.சி.டி.சி ரயில் கனெக்ட் செயலியின் 'சார்ட் வேகன்ஸி' மற்றும் 'கரண்ட் புக்கிங்' வசதிகளைப் பயன்படுத்தி, இந்த காலி இருக்கைகளைக் கண்டறிந்து சில நிமிடங்களில் உறுதியான டிக்கெட்டைப் பெறலாம். இந்திய ரயில்களில் கடைசி நேரத்தில் பயணச்சீட்டு பெறுவது பலருக்கும் பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக, ரயிலின் முன்பதிவுப் பட்டியல் (Chart) தயார் செய்யப்பட்ட பிறகு பயணச்சீட்டு கிடைப்பது முற்றிலும் கடினம் என்றே பலரும் நினைக்கின்றனர். ஆனால், சார்ட் தயார் செய்யப்பட்ட பிறகும் கூட ரயில்களில் சில இருக்கைகள் (Berths) காலியாக இருக்க வாய்ப்புள்ளது. தட்கல் (Tatkal) கட்டணம் ஏதுமின்றி, இந்த காலியிடங்களைக் கண்டறிந்து உறுதிசெய்யப்பட்ட (Confirmed) டிக்கெட்டை முன்பதிவு செய்யும் எளிய வழிமுறைகளை இந்திய இரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) வழங்குகிறது. சார்ட் போட்ட பிறகு காலி இருக்கையை முன்பதிவு செய்வது எப்படி? 1. ‘சார்ட் வேகன்சி’ (Chart Vacancy) தேர்வைப் பயன்படுத்தவும்: முதலில் உங்கள் கைபேசியில் உள்ள 'IRCTC Rail Connect' செயலியை (App) திறக்கவும். அதில் உள்ள 'Train' பிரிவின் கீழ் 'Chart Vacancy' என்ற தேர்வை கிளிக் செய்யவும். 2. ரயில் மற்றும் பயண விவரங்களை உள்ளிடவும்: நீங்கள் பயணிக்க விரும்பும் ரயிலின் எண் அல்லது பெயர், பயணத் தேதி மற்றும் கிளம்பும் நிலையம் (Boarding Station) ஆகிய விவரங்களை சரியாக உள்ளிடவும். இப்போது அந்த ரயிலில் எந்தெந்தப் பெட்டிகளில் (Coaches) எந்தெந்த இருக்கைகள் காலியாக இருக்கின்றன என்ற விவரம் திரையில் தோன்றும். 3. இருக்கையைச் சரிபார்த்து முன்பதிவு செய்யவும்: ஒரு இருக்கை சில குறிப்பிட்ட நிலையங்களுக்கு இடையே மட்டுமே காலியாக இருக்கலாம்; முழுப் பயணத்திற்கும் காலியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, நீங்கள் பயணிக்க விரும்பும்தொலைவுக்கு அந்த இருக்கை காலியாக உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளவும். உங்கள் பயணத்திற்கு உகந்த இருக்கை கிடைக்கும் பட்சத்தில், ஐ.ஆர்.சி.டி.சி செயலியின் 'Current Booking' (தற்போதைய முன்பதிவு) தேர்வுக்குச் சென்று பயணிகள் விவரங்களை உள்ளிட்டு, கட்டணத்தைச் செலுத்தி உடனடியாக உறுதியான டிக்கெட்டைப் பெறலாம். கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்: தற்போதைய முன்பதிவு வசதி (Current Booking): இரயில்வே விதிகளின்படி, சார்ட் தயாரித்த பிறகு காலியாக இருக்கும் இருக்கைகள் 'Current Booking' முறை மூலம் மட்டுமே வழங்கப்படும். இதில் உறுதிசெய்யப்பட்ட (Confirmed) டிக்கெட்டுகள் மட்டுமே பெற முடியும். வழித்தடக் கட்டுப்பாடு: சார்ட்டில் தெரியும் காலி இருக்கை நீங்கள் செல்லும் கடைசி நிலையம் வரை காலியாக இருக்க வேண்டும் என்பதில்லை. அதனால் முன்பதிவு செய்யும் முன் உங்களுக்கான வழித்தடத்திற்கான காலி இருக்கதானா என்பதைச் சரிபார்ப்பது அவசியமாகும். இனி கடைசி நேரப் பயணங்களின் போது தத்கால் கட்டணம் இன்றி, இம்முறையைப் பயன்படுத்தி எளிய வழியில் ரயிலில் இருக்கைகளைக் கண்டறிந்து பயணிக்கலாம். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
சார்ட் தயார் செய்த பிறகும் ரயிலில் காலியாக இருக்கும் சீட்டை முன்பதிவு செய்வது எப்படி?: எளிய வழிமுறைகள் இதோ
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk