பட மூலாதாரம், Getty Images சிங்கப்பூரில் இப்போது, இருக்கைகளின் மீது கால்களை வைப்பது, சத்தமாக ஆடியோவை ஒலிக்கச் செய்வது, மேலும் பேருந்துக்குள் உண்பது, குடிப்பது அல்லது குப்பை கொட்டுவது போன்ற செயல்களுக்காக பேருந்துப் பயணிகள் 500 சிங்கப்பூர் டாலர் (சுமார் 37,478 இந்திய ரூபாய்) வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். மற்ற பயணிகளுக்கு இடையூறு அல்லது ஆபத்தை ஏற்படுத்துவது, அல்லது "பொது பேருந்து, பேருந்து மாற்று நிலையம் அல்லது முனையத்தின் ஏதேனும் ஒரு பகுதியை அழுக்குபடுத்துவது" போன்ற கடுமையான விதிமீறல்களுக்கு 5,000 சிங்கப்பூர் டாலர் வரை (சுமார் 3,74,698 இந்திய ரூபாய்) அபராதம் விதிக்கப்படும். "இது அனைவருக்கும் பாதுகாப்பான, பிறரைக் கருத்தில் கொள்ளும் மற்றும் இனிமையான பொதுப் போக்குவரத்து சூழலை உருவாக்க உதவும்," என்று சிங்கப்பூரின் நில போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை அறிவிக்கப்பட்ட இந்த புதிய விதிமுறைகள், சிங்கப்பூரின் ரயில் வலையமைப்பில் (எம்ஆர்டி) ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிகளுடன் ஒத்துப்போகின்றன. உதாரணமாக, எம்ஆர்டி ரயில்களில் உணவு உண்பவர்களுக்கு நீண்டகாலமாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பேருந்துகளில் இதுபோன்ற விதிகள் பெரும்பாலும் போக்குவரத்து நிறுவனங்களின் உள்கட்டுப்பாடுகளாகவே இருந்து வந்தன. அவற்றை அமல்படுத்தும் பொறுப்பு ஓட்டுநர்களிடம் இருந்தது. தேவையானபோது, விதிகளை மீறும் பயணிகளை பேருந்திலிருந்து இறங்குமாறும் அவர்கள் கூற முடிந்தது. இப்போது, பிறருக்கு இடையூறு விளைவிக்கும் இத்தகைய நடத்தைகள் நேரடியாக அபராதம் விதிக்கக்கூடிய சட்டப்பூர்வ குற்றங்களாக அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளன. டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் பேருந்து மாற்று நிலையப் பணியாளர்கள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட பேருந்துப் பணியாளர்கள், குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் பயணிகளுக்கு அதிகாரப்பூர்வ சட்டமீறல் அறிவிப்புகளை வழங்க முடியும் என்று எல்டிஏ தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், Getty Images சிங்கப்பூரில் "கேப்டன்கள்" என்று அழைக்கப்படும் பேருந்து ஓட்டுநர்களுக்கு இந்த அதிகாரம் வழங்கப்படாது. இதனால் அவர்கள் பேருந்தை பாதுகாப்பாக இயக்கும் கடமைக்கு முன்னுரிமை அளிக்க முடியும். இருப்பினும், ஒழுங்கீனமான நடத்தையை நிறுத்துமாறு பயணிகளிடம் அவர்கள் கூறலாம். அதற்கு இணங்க மறுப்பவர்கள் பேருந்திலிருந்து இறக்கப்படலாம். தீவிரமான சூழல்களில் காவல்துறையின் தலையீடும் ஏற்படலாம். End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு பொதுப் போக்குவரத்தை மேலும் அமைதியானதாக மாற்ற முயற்சிப்பதில் சிங்கப்பூர் மட்டும் தனித்திருக்கவில்லை. போக்குவரத்து வலையமைப்புகள் விரிவடைந்து வரும் நிலையில், உலகம் முழுவதும் பல நகரங்கள் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் நடத்தைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், போலந்தின் கிரகோவ் நகரமும் பேருந்து தொந்தரவுகளை குறிவைத்து இதேபோன்ற விதிகளை அறிமுகப்படுத்தியது. பொதுப் போக்குவரத்தில் இடையூறு விளைவிக்கும் நடத்தையில் ஈடுபடும் பயணிகளுக்கு 200 ஸ்லோட்டி வரை அபராதம் விதிக்கப்படலாம். அதில் சத்தமாக இசை ஒலிக்கச் செய்வது, ஹெட்போன் இல்லாமல் காணொளிகளைப் பார்ப்பது அல்லது பேருந்துகள் மற்றும் டிராம்களில் ஒலிபெருக்கி வசதியைப் பயன்படுத்தி உரத்த குரலில் தொலைபேசியில் பேசுவது போன்றவை அடங்கும். பிரிட்டனில் பிறருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி "ஒலி உற்பத்தி செய்யும் சாதனங்களை" பயன்படுத்துவதை தற்போதைய சட்டங்கள் தடை செய்கின்றன. இதற்காக அதிகபட்சமாக 1,000 பவுண்டு வரை அபராதம் விதிக்கப்படலாம். சில அரசியல்வாதிகள், பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரத்திலும் ஹெட்போன்களை தவிர்க்கும் பயணிகளுக்கு குறிப்பாக அபராதம் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சிங்கப்பூர், கிராகோவ் மற்றும் பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த விதிகள், பொதுப் போக்குவரத்தில் பயணிகளின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய போக்குவரத்து அதிகாரிகள் அதிகமாக தலையிடும் போக்கைக் காட்டுகின்றன. சிங்கப்பூர் நில போக்குவரத்து ஆணையம் கூறுவதைப்போல "பொதுப் போக்குவரத்து என்பது அனைவரும் பகிர்ந்து கொள்ளும் இடமாகும். மரியாதையான மற்றும் இனிமையான பயணச் சூழலை உருவாக்குவதில் ஒவ்வொரு பயணிக்கும் ஒரு பொறுப்பு உள்ளது." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
சிங்கப்பூரில் பேருந்தில் சத்தமாக பாடல் கேட்டால், இருக்கையில் கால் வைத்தால் ரூ. 37 ஆயிரம் அபராதம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk