Tamil Nadu Latest News Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்! மதுராந்தகத்தில் இன்று விஜய் பிரசாரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, அக்கட்சித் தலைவரும் முதலமைச்சருமான விஜய் இன்று (செப். 25) ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே பரப்புரை மேற்கொள்கிறார். கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு பெற்ற 5,000 பேருக்கு மட்டுமே கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மதுராந்தகத்தில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜய் மற்றும் த.வெ.க. குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் விசாரணை தீவிரம் ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் செல்போன்கள், ஆவணங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வழக்கின் முந்தைய விசாரணை எவ்வாறு கையாளப்பட்டது என்பது குறித்தும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளான ஏ.அருண் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்; ரம்யா பாரதிக்கு கோவை மாநகர காவல் ஆணையர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. காவிரி நீர்: கர்நாடகாவிலிருந்து 4,000 கனஅடி திறக்க உத்தரவு தமிழகத்திற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 4,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. செப்டம்பர் 25 முதல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தமிழக அதிகாரிகள் மாநிலத்தின் பாசனத் தேவைகள் மற்றும் நிலுவையில் உள்ள நீர் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேநேரம், கர்நாடகா இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.பி. அண்ணாதுரையின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து வந்த இரண்டு தனித்தனி குழுக்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சோதனைக்கான காரணம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
Chennai News Live Updates: தி.மு.க எம்.பி. அண்ணாதுரை இல்லத்தில் சோதனை; 2 குழுக்களாக வந்த லஞ்ச ஒழிப்புத்துறை
📅
📍 Vellore, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk