AI makes phone calls for you நம்ம ஜெமினிகிட்ட "இந்தக் கடையில இந்த பொருள் இருக்கானு கேட்டுச் சொல்லு" இல்லனா "டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் புக் பண்ணு" அப்படின்னு சொன்னாலே போதும்; அதுவே சம்பந்தப்பட்ட இடத்துக்கு போன் பண்ணி பேசி விவரங்களைக் கேட்டுத் தந்துடும். கூகுள் ஜெமினியின் புதிய 'Call for Me' வசதி: இது எப்படி வேலை செய்யுது தெரியுமா? இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன்கள் எல்லாமே வெறும் ஆப் (App) யூஸ் பண்றதுக்கு மட்டும் இல்லாம, நமக்காவே எல்லா வேலையையும் பார்த்துக்கொடுக்குற ஏ.ஐ. (AI) ஏஜெண்டுகளாக மாறிட்டு வருது. அந்த வரிசையில, கூகுள் நிறுவனம் தன்னோட ஜெமினி AI அசிஸ்டெண்ட்ல செம பயனுள்ள ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியிருக்கு. 'கால் ஃபார் மீ' (Call for Me) அப்படின்னா என்ன? நம்மல பல பேருக்கு கடைகளுக்கு போன் பண்ணி பொருள் இருக்கானு கேட்கவோ, ரெஸ்டாரண்ட்ல டேபிள் புக் பண்ணவோ, டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவோ தயக்கம் இருக்கும் இல்லையா? அதுக்காகவே கூகுள் 'கால் ஃபார் மீ' என்கிற அம்சத்தை கொண்டு வந்திருக்கு. ஆங்கிலத்தில் வாசிக்க இதன் மூலமா, நம்ம ஜெமினிகிட்ட "இந்தக் கடையில இந்த பொருள் இருக்கானு கேட்டுச் சொல்லு" இல்லனா "டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் புக் பண்ணு" அப்படின்னு சொன்னாலே போதும்; அதுவே சம்பந்தப்பட்ட இடத்துக்கு போன் பண்ணி பேசி விவரங்களைக் கேட்டுத் தந்துடும். இப்போதைக்கு இந்த வசதி அமெரிக்காவில் இருக்கிற பிக்சல் 11 (Pixel 11) போன் யூசர்களுக்கு, அதுவும் ஜெமினி சப்ஸ்கிரிப்ஷன் வச்சிருக்கிறவங்களுக்கு சோதனை முறையில (Experimental phase) மட்டும் கொடுக்கப்பட்டிருக்கு. இது எப்படி வேலை செய்யுது? ஜெமினி வேற எதிலுமிருந்து கால் பண்ணாது; நம்ம சொந்த போன் நம்பர் வச்சே நேரடியா கால் பண்ணிப் பேசும். மறுமுனையில் மனுஷங்களோ அல்லது ரோபோட் (Bot) குரலோ எடுத்ததும், ஜெமினி தான் ஒரு AI உதவியாளர்னு சுயமாகவே அறிமுகப்படுத்திக்கிடும். அப்புறம், கம்ப்யூட்டர் குரல் சொல்ற ஆப்ஷன்களை செலக்ட் பண்ணி, லைன்ல வெயிட் பண்ணவும் செய்யும். கால் பேசிட்டு இருக்கும்போதே, அவங்க என்ன பேசுறாங்கனு ஸ்கிரீன்ல எழுத்து வடிவுல லைவாவே நமக்கு காட்டும் (Live Transcript). நடுவுல நமக்கு பேசணும்னு தோணுச்சுனா, எப்போ வேணாலும் போனை நம்ம கைக்கு மாத்திக்கலாம். உங்களுடைய பர்சனல் விஷயங்களை மத்தவங்க கிட்ட ஷேர் பண்றதுக்கு முன்னாடி, ஜெமினி உங்ககிட்ட பெர்மிஷன் கேட்கும். நீங்க ஓகே சொன்னா மட்டும்தான் அது பேசும. கூகுளின் முந்தைய வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதிகள் கூகுள் இதுக்கு முன்னாடியே இந்த ('Hold for Me', 'Talk to a Live Rep', 'Direct My Call'0 மாதிரியான சில வசதிகளைக் கொண்டு வந்திருந்தாலும், அது எல்லாமே போன்ல வெயிட் பண்றதுக்கு மட்டும்தான் ஹெல்ப் பண்ணுச்சு. ஆனா இப்போ வந்திருக்கோ இந்த 'கால் ஃபார் மீ' வசதி ரொம்பவே அட்வான்ஸ்டா இருக்கு. நிஜ உலகத்துல மனுஷங்க பேசுற விதம் ரொம்பவே வித்தியாசமானதுங்கிறதால, இப்போதைக்கு இதை ரொம்ப சின்ன அளவுல மட்டும்தான் கூகுள் பரிசோதனை பண்ணிட்டு வருது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
உங்களுக்காக இனி ஜெமினியே போன் பண்ணும்: கூகுளின் செம கலக்கலான புதிய வசதி
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk