எனக்கு சித்தப்பா என்று யாரும் கிடையாது. இரண்டாவதாக, எனது தாத்தாவின் பெயரில் இயங்கும் அந்த அறக்கட்டளையானது பல்வேறு சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறியுள்ளது. எனது தாத்தாவின் பெயரில் இயங்கும் அந்த அறக்கட்டளை பல்வேறு சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறியுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு ரூ.2 கோடிக்கும் மேலாகச் சொத்து வரி நிலுவையில் வைத்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மதுரையை ஆளும் பாண்டிய மன்னர் என்று தன்னைத்தானே கருதிக்கொள்ளும் மின்சாரத் துறை அமைச்சர், இம்முறையும் “குடும்ப அறக்கட்டளை” என அழைக்கப்படும் ஒன்றைக் குறித்து, தமது வழக்கம்போலவே பொய்யான கருத்துக்களைப் பேசியுள்ளார். இப்படி ஒவ்வொரு நாளும் தனக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்பை மீறிச் செயல்படுவதற்கு, முதலமைச்சரின் ஆலோசகர்களில் ‘யார்’, இவ்வளவு உதவுகிறார் என்ற கேள்வி இப்போதும் எழவே செய்கிறது. முதலாவதாக, அவர் கூறுவதுபோல் எனக்கு சித்தப்பா என்று யாரும் கிடையாது. இரண்டாவதாக, எனது தாத்தாவின் பெயரில் இயங்கும் அந்த அறக்கட்டளையானது பல்வேறு சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறியுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு ரூ.2 கோடிக்கும் மேலாகச் சொத்து வரி நிலுவையில் வைத்திருப்பதும் அதில் ஒன்று. இதுகுறித்து நானே கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகப் புகார் அளித்து வருகிறேன்.அந்த அறக்கட்டளையின் பெயரில் நடக்கும் முறைகேடுகளின் முக்கியக் குற்றவாளி என்று நான் கருதுவது, ஒரு ஆடிட்டர் ஆவார். அந்த நபர் மீது ஏற்கனவே குளோபல் டிரஸ்ட் வங்கி, DSQ Software உள்ளிட்ட முறைகேடுகளில் நெருங்கிய தொடர்புடையவர். மேலும், சத்யம் நிறுவன முறைகேட்டுடனான தொடர்பு காரணமாக, PwC India நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட ஒரே நபர் அவர்தான். இந்தியாவின் தீவிரமான நிதி முறைகேடுகள் குறித்த விசாரணை அமைப்பான SFIO மற்றும் அமெரிக்காவின் SEC ஆகியவற்றிலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உண்டு. இப்படி, பல்வேறு குற்றச்சட்டங்களுக்கு உள்ளன அந்த நபருக்கு, சட்ட அமைச்சருடன் திடீரென நெருக்கம் ஏற்படுவதில் வியப்பேதுமில்லை. ஒரே குணம் கொண்டவர்கள் நெருக்கமாவது இயற்கைதான். இந்த விவகாரத்தை மக்கள் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். ஏனெனில், அந்த ஆடிட்டர் உயர் நீதிமன்ற சென்னை மற்றும் மதுரை கிளைகளில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட முறை அணுகியும், பல நீதிபதிகளால் வழங்க மறுக்கப்பட்ட அனுமதிகளைச் சட்ட விதிகளுக்குப் புறம்பாகப் பெற வாய்ப்புள்ளது. மதுரையின் மன்னராகத் தன்னை கற்பனை செய்துகொள்பவர், அந்த அறக்கட்டளை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.2 கோடிக்கும் அதிகமான நிலுவைச் சொத்து வரியில் ஏதேனும் “கட்டிங்” வாங்கிக்கொண்டு, அதிகாரிகளை கட்டாயப்படுத்தி அனுமதிகளைப் பெற்றுத் தரக்கூடும். தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் காணப்படும் மின்வெட்டால் சாமானிய மக்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகிறார்கள். ஆனால், அதற்குத் தீர்வு காண்பதில் உரிய கவனம் செலுத்தாமல், உள்நோக்கத்துடன் தனக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்பைத் தொடர்ந்து மீறி வரும் இவர், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே மிக மோசமான மின்சாரத் துறை அமைச்சராக நினைவுகூரப்படுவார். ஐந்து கட்சிகளைத் தாண்டி வந்த நம்பகத்தன்மையற்ற ஒருவருக்கு மின்சாரத் துறையை வழங்கியதோடு கூடுதலாக, சட்டத் துறையையும் வழங்கி, அவரை ஒரு நிழல் “அதிகார மையமாக” செயல்பட மறைமுகமாக அனுமதிப்பது, இந்த அரசின் நிர்வாகத் தோல்வியையே வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
'எனது தாத்தா பெயரில் இயங்கும் டிரஸ்டில் முறைகேடு நிஜம்; இது பற்றி நானே புகார் கூறி இருக்கிறேன்': நிர்மல் குமாருக்கு பி.டி.ஆர் பதில்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk