அதிரடி அல்ல, அவரிடம் இருக்கும் குழந்தைத்தனமான குணத்தை திரையில் பார்க்க வேண்டும்: அப்பா விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் கருத்து

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
அதிரடி அல்ல, அவரிடம் இருக்கும் குழந்தைத்தனமான குணத்தை திரையில் பார்க்க வேண்டும்: அப்பா விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் கருத்து

என் தந்தை மாநிலத்தின் முதலமைச்சர் என்பதால், யாரையும் புண்படுத்தும் வகையில் கவனக்குறைவாக நான் எதையும் செய்வதில்லை என்று ஜேசன் சஞ்சய் கூறியுள்ளார். சிக்மா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆக உள்ள ஜேசன் சஞ்சய், தனது தந்தை விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவரது சமீபத்திய படங்களில் காணப்படும் அதிரடி மாஸ் நாயக பிம்பத்தை விட, அவருடைய நகைச்சுவை உணர்வையும், அவருக்குள் இருக்கும் குழந்தைத்தனமான இயல்பையும் திரையில் கொண்டு வர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: இது குறித்து பேசிய அவர், ஒரு மகனாக இல்லாமல், ஒரு நடிகரைப் பார்க்கும் இயக்குநராகத் தனது தந்தையிடம் அவர் அதிகம் ரசிக்கும் குணம் எது என்று கேட்டபோது, "அவரது நகைச்சுவை உணர்வுதான்; அவரைத் திரையில் பார்ப்பதை நான் மிகவும் ரசிக்கிறேன். அவர் எவ்வித தடைகளுமின்றி, இயல்பாக இருப்பது போல் தோன்றும். நான் வளரும்போது வீட்டில் அவரது தனிப்பட்ட பக்கத்தையும், அவருக்குள் இருக்கும் அந்த அசல் குழந்தைத்தனமான இயல்பையும் பார்த்திருக்கிறேன்," என்று சஞ்சய் கூறினார். விஜய்யின் சமீபத்திய திரைப்படங்கள் மறைத்து வைத்திருந்த ஒரு பக்கத்தைச் சுட்டிக்காட்டுவதால் இந்த பதில் கவனம் பெறுகிறது. கடந்த பத்தாண்டுகளாக, விஜய்யின் படங்கள் பெரும் அதிரடி ஆக்ஷன், அரசியல் கருத்துக்கள் மற்றும் கதாநாயக பிம்பத்தை மட்டுமே முதன்மையாகக் கொண்டுள்ளன. அவரது சுலபமான, கலகலப்பான நடிப்பு பல ஆண்டுகளாகத் திரையில் வரவில்லை. இதனிடையே கலாட்டா பிளஸ் நேர்காணலில் பேசிய ஜேசன் சஞ்சய், "தனது திரைப்பயணத்தின் பாதையில், மக்கள் தங்களை எளிதாகப் பொருத்திக்கொள்ளக்கூடிய கதாப்பாத்திரங்களில் அவர் முழுமையாக நடிப்பதற்கான படங்கள் அமைவது நின்றுவிட்டது என்று நினைக்கிறேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தால், அவரிடமிருந்து அந்தப் பக்கத்தை அதிகம் வெளிக்கொண்டுவர விரும்புவேன்," என்றார். 25 வயதான ஜேசன் சஞ்சய், தனது முதல் படத்திற்கு முன்பாகத் தனது தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர் அளித்த அறிவுரை, படப்பிடிப்பு தளத்தில் யாருக்கும் தன் சந்தேகங்களைக் காட்டக்கூடாது என்று கூறியதாக வெளிப்படுத்தினார். "ஒரு விஷயத்தில் உங்களுக்கு மாற்றுக்கருத்தோ அல்லது சந்தேகமோ இருந்தாலும், அதை படப்பிடிப்பு தளத்தில் யாருக்கும் காட்டக்கூடாது," என்று தனது தாத்தா கூறியதைச் சஞ்சய் நினைவுகூர்ந்தார். தனது தாத்தாவின் உழைப்பு முறையே இந்தத் தத்துவத்திற்குச் சான்றாக இருந்தது என்று ஜெய்சன் சஞ்சய் கூறினார். "அவர் நாளின் முதல் பாதியில் ஒரு படப்பிடிப்பிலும், இரண்டாம் பாதியில் அவர் இயக்கும் மற்றொரு படத்திலும் பணியாற்றுவார். அது ஒரு வேறுபட்ட காலம்," என்றார் சஞ்சய்.ட்ரோல்களை ஜெய்சன் சஞ்சய் எவ்வாறு கையாள்கிறார் தனது தாத்தாவிடமிருந்து கற்றுக் கொண்ட பாடங்களைத் தாண்டி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் என்பதால் வரும் விமர்சனங்களையும் கவனத்தையும் ஜேசன் சஞ்சய் உணர்ந்துள்ளார். "என்னை நேரில் அறியாதவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதன் மூலம் நான் ஈர்க்கப்பட முடியாது. எனது வேலை மட்டுமே எனக்காகப் பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும், என்னைப் பற்றிய ஒவ்வொரு கதைகளுக்கும் அல்லது கருத்துக்களுக்கும் நான் விளக்கம் அளித்துக் கொண்டிருக்க முடியாது. என் தந்தை இப்போது இருக்கும் சூழலால், குடும்பத்தின் நற்பெயரைக் காப்பதை நான் உறுதி செய்ய வேண்டும். என் தந்தை மாநிலத்தின் முதலமைச்சர் என்பதால், யாரையும் புண்படுத்தும் வகையில் கவனக்குறைவாக நான் எதையும் செய்வதில்லை. என் தனிப்பட்ட வாழ்க்கையில், சில விஷயங்களில் இருந்து நான் விலகியிருக்க வேண்டும். எனக்கு சில எல்லைகள் உள்ளன என கூறியுள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: மேலும், ஜேசன் சஞ்சய் தனது முதல் இயக்கமான ‘சிக்மா’ (Sigma) திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகவுள்ள நிலையில், படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன் அதன் திரைக்கதையைத் தன் தந்தையும் தமிழ்நாடு முதலமைச்சருமான ‘தளபதி’ விஜய்யிடம் பகிரவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், தன் தாத்தாவும் மூத்த இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரும் கூட அத்திரைக்கதையை முன்னரே பார்க்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், திரைப்படத்தைப் பார்ப்பதற்கு முன்பே அதன் முழு விவரங்களையும் தெரிந்துகொள்வதை விட, திரையரங்கில் பார்வையாளர்களாகவே அதை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே தனது குடும்பத்தினரிடம் விவரங்களை மறைத்ததாகக் கூறினார். “நான் கதையின் சுருக்கத்தை (outline) மட்டும் குடும்பத்தினர் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டேன், ஆனால் முழு விவரங்களையும் கூறவில்லை. ஏனெனில், அவர்களும் ஒரு புதிய கோணத்தில் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்பதே எனது இலக்கு,” என்று தெரிவித்துள்ளார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை