ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், பல ஆண்டுகளாக வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்ற குற்றம் எழுந்தது. இதையடுத்து டிஜிபி, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி தலைமையில் நான்கு பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து, அனைத்து ஆதாரங்களையும் மீளாய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கடந்த பல ஆண்டுகளாகவே ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ ஆதாரங்கள் வெளியானதாக சொல்லப்பட்டது. இது குறித்து 2024ஆம் ஆண்டு காங்கிரஸ் எஸ் சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் புகார் கொடுத்தும் அந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் இருந்ததாக தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் கடந்த 10 நாட்களாக இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த காலங்களில் கோடிக்கணக்கான ரூபாய் இந்த வழக்கை மூடி மறைப்பதற்காக பெறப்பட்டதாக தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் கடந்த 2024 ஆம் ஆண்டு சென்னை காவலர் ஆணையராக இருந்த அருண், கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சி பள்ளி ஏடிஜிபி ஆக இருந்த அருண், கோவை ஆணையராக இருந்த கண்ணன், கோயம்பேடு உதவி ஆணையராக பணிபுரிந்த யாஸ்மின், காவல் உதவி ஆய்வாளர் மகேஷ் உள்ளிட்ட ஐந்து பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி போக்சோ வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய், காவல் ஆணையராக உள்ள அமல்ராஜ் அழைத்து உத்தரவு பிறப்பித்தார். தற்போது வீரமணி போக்சோ வழக்கை விசாரிக்க புதிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி, மேற்கு மண்டல இணை ஆணையர் திஷா மீட்டல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் கீதாஞ்சலி, டிஜிபி அலுவலக செய்தி தொடர்பு அலுவலர் முத்தரசி ஐபிஎஸ் உள்ளிட்ட நான்கு பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குழு வீரமணி தொடர்பான அனைத்து ஆதாரங்கள், விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விசாரித்து ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு| 4 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு!
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk