கிராமத்து படமாக இருந்தாலும், நகரத்து கதையாக இருந்தாலும், இசையில் ஜாலம் செய்யும் வல்லமை படைத்த இளையராஜா, பாடல் பாடுவது, எழுதுவது என தனது தனித்திறமையுடன் வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளைராஜா, இசையமைப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமையுடன் இருந்தாலும், அவர் இயக்குனர் அவதாரம் கூட எடுப்பதற்கு ரெடியாக இருந்ததாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில், இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா, முதல் படத்தில் இருந்தே இசையில் முத்திரை பதித்து வருகிறார். இசை மட்டுமல்லாமல், பாடல் பாடுவது, பாடல் எழுதுவது என பல திறமைகளுடன் வலம் வரும் இவர், தனது இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று காலம் கடந்து இன்றளவும் நிலைத்திருக்கிறது. 1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாரளாக அறிமுகமான இளையராஜா, அதன்பிறகு முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்துள்ளார். கிராமத்து படமாக இருந்தாலும், நகரத்து கதையாக இருந்தாலும், இசையில் ஜாலம் செய்யும் வல்லமை படைத்த இளையராஜா, பாடல் பாடுவது, எழுதுவது என தனது தனித்திறமையுடன் வலம் வருகிறார். இசையில் பல புதுமைககள் சயசெய்துள்ள இளையராஜா ஒரு படத்திற்கு இயக்குனர் ஆவதற்கும் ரெடியாக இருந்துள்ளார். 1989-ம் ஆண்டு ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான படம் ராஜாதி ராஜா. ரஜினிகாந்த், ராதா, நதியா, ஜனகராஜ், ராதாரவி, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில், அவரது அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் இந்த படத்தை தயாரித்திருந்தார். ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்த ராஜாதி ராஜா திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்திற்காக ரஜினிகாந்த் முதலில் டேட் கொடுத்தவுடன், ராஜாதி ராஜா என்று டைட்டில் சொன்ன இளையராஜா, சரி படத்தை நானே இயக்கிவிடுவிடுகிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு ரஜினிகாந்தை அழைத்து படத்தின் டைட்டில் ராஜாதி ராஜா என்று சொல்ல, ஏன் இப்படி என்று கேட்டுள்ளார். நான் ராஜா. என்னை விட நீங்கள் சூப்பர் ஸ்டார் என்பதால் ராஜாதி ராஜா என்று வைத்தேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட ரஜினிகாந்த் டைட்டில் சூப்பராக இருக்கிறது. படம் சரியாக வரும்ல என்று கேட்டுள்ளார். இளையாஜாவும் கண்டிப்பாக நன்றாக வரும் என்று கூறியுள்ளார். இறுதியில் இளையராஜா இந்த படத்தை இயக்காமல், ஆர்.சுந்தர்ராஜா இயக்கியுள்ளார். படத்தின் கதை மீது ரஜினிக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், இந்த படம் வெற்றி ஆகவில்லை என்றால் நான் இசையமைப்பதை நிறுத்திவிடுகிறேன் என்று இளையராஜா சவால் விடுத்து படத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைத்தாக ஒரு தகவல் இருக்கிறது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. I’m ELAYARAJA D, a seasoned media professional with over 9 years of experience in digital journalism. Currently Working as a Senior Sub-Editor at The Indian Express (Tamil) since Dec 2020, I specialize in reporting on Entertainment, Sports, and Tamilnadu news. My Media journey began in 2015 as a Playout Operator and Video Editor In JM Entertainment Network (Local TV Channel) in Trichy Upto 2017. Then spent Three years as a Sub Editor In Dineseithigai Online Media (Malayalam Express Group) Upto Dec 2020 and have extensive experience Sports reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from Periyar EVR College, Trichirapalli and a Master’s in Visual Communication from Thiru.Vi.Ka Arts College Thiruvarur. Contact: d.elayaraja@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
ஜெஸ்ட் மிஸ், இல்லனா இளையராஜாவை இயக்குனரா பார்த்திருக்கலாம்; ரஜினி படத்தை இயக்க தயாரான இசைஞானி விலகிய சம்பவம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk